அங்குசம் சேனலில் இணைய

தங்க முலாம் பூசிய நகை மோசடி கும்பலின் தலைவன் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காப்பர் கம்பியில் தங்க முலாம் பூசிய வளையல்களை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்த கும்பல் ஒன்றை சமீபத்தில் மதுரை போலீசார் கைது செய்திருந்தார்கள். இது தொடர்பாக, “காப்பர் கம்பியில் தங்க மூலம் பூசி பலே மோசடி! கோடியில் புரண்ட கேடிகள் !!” என்ற தலைப்பில் நமது அங்குசம் நவ 1 to 15 இதழில் வெளியிட்டு இருந்தோம்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவரும் மதுரை மாவட்டக்குற்றப்பிரிவு போலீசார், ஏற்கெனவே ஆறுபேரை கைது செய்திருந்த நிலையில், தலைமறைவான எட்டு பேரை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

நகை மோசடி கும்பலின் தலைவன் கைது
நகை மோசடி கும்பலின் தலைவன் கைது

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முருகன், சிதம்பரம் பகுதியில் போலி நகைகளை செய்வதற்கென்றே தனியாக  நகைப்பட்டறை ஒன்றை வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“இந்த மோசடியில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் நகை அடகு வைப்பதற்காக வங்கியை அணுகினால், அருகிலுள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கி ஊழியர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.” என்கிறார், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாது ரமேஷ்.

 

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

 

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.