UPI பயன்படுத்துபவர்களை குறிவைக்கும் புதிய விதமான மோசடி – சைபர் கிரைம் எச்சரிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு, UPI பயன்படுத்துபவர்களை குறிவைத்து நடைபெறும் புதிய விதமான மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுமாறு எச்சரிக்கை செய்யும் விதமாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தி குறிப்பில்  PhonePe உள்ளிட்ட UPI பயன்படுத்தப்படுவதன் மூலம் மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறுவதாக சமீபத்தில் புகார்கள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் PhonePe வழியாக அவர்களுக்கு தெரியாமல் அல்லது அனுமதியின்றி அவர்களது வங்கிக்கணக்கிலிருந்து எதிர்பாராத முறையில் பணம் மோசடியாக எடுக்கப்படுவதாக புகாரளித்துள்ளனர்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

சைபர் கிரைம்இந்த புகார்கள் சம்மந்தமான விசாரணையின்போது, அனைத்து புகார்களிலும் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும் Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டது.

2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும், தமிழ்நாட்டில் National Cyber Crime Reporting Portal மூலம் சுமார் 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்த மோசடி செயல்பாட்டின் தீவிர தன்மையை வெளிப்படுத்துகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த மோசடி எவ்வாறு செய்யபடுகிறது:

PhonePe மூலம் அனுமதி இல்லாத பணப்பரிவர்த்தனைகளைப் பற்றிய விசாரணையில் PM Kisan Yojna என்ற மோசடி செயலி பயன்படுத்தபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த செயலி பல்வேறு சேனல்கள் மூலம் குறிப்பாக WhatsApp மூலம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இது பயனாளிகளின் SMS பயன்பாட்டையும் மற்றும் சாதனங்களை இயக்குவதையும் கட்டுப்படுத்த கூடியது. மோசடிக்காரர்கள் SMS போக்குவரத்தை தடுத்து அதன்மூலம் UPI செயலிகளில் மாற்றம் செய்து பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு மோசடியாக சேகரிக்கபட்ட தரவுகளை கொண்டு UPI செயலிகளில் பயன்படுத்தி அனுமதி இல்லாத பரிவர்த்தனைகளை மோசடியாக செய்கின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த செயலிகள் பெயர், ஆதார் எண், PAN, மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகளை இணையத்திலிருந்து எடுத்துகொள்கிறது. இந்த அதிநவீன மோசடி தாக்குதல் பலருக்கு நிதி மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மோசடிக்காரர்கள் அரசாங்கத்தின் நலதிட்டங்களின் மீதான நம்பிக்கை மற்றும் தேவைகளின் மீதான அச்சதை ஏற்படுத்தி உள்ளார்கள்.

சைபர் கிரைம் மோசடி
சைபர் கிரைம் மோசடி

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது:

 உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும்.

  • தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வதை, தேவையில்லாத செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும்.
  • எந்த சூழ்நிலையிலும் முக்கிய UPI தரவுகளை அல்லது OTP-ஐ பகிர்வதை தவிர்க்கவும்.
  • நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
  • எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் மற்றும் தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்து இதுபோன்ற UPI மோசடியில் சிக்கி கொள்ளாமல் இருக்க சைபர் கிரைம் குற்றப் பிரிவில் தெரிவித்துள்ளனர்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.