காவல் நிலையங்களின் செயல்திறனை கண்டறிய சைபர் கிரைம் ஆய்வுக் கூட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜனவரி முதல் அக்டோபர் 2024 வரையிலான மாவட்ட மற்றும் நகர சைபர் கிரைம் காவல் நிலையங்களின் செயல்திறனை ஆய்வு செய்வதற்காக சைபர் கிரைம் ஆய்வுக் கூட்டம், 2024 நவம்பர் 20 அன்று நடைபெற்றது. டாக்டர் சந்தீப் மிட்டல், ஐ.பி.எஸ்., கூடுதல் காவல்துறை இயக்குநர் சைபர் கிரைம் பிரிவு தொடக்கி வைத்தார்.

டாக்டர் சந்தீப் மிட்டல், இ.கா.ப. அவர்களது தொடக்க உரையில், அவர்கள் காவல்துறையின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி சைபர் கிரைம் குற்றவாளிகளை வெற்றிகரமாகக் கண்டறிந்து கைது செய்த காவல்துறையினரைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கினார்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

போலி கணக்கு வைத்திருப்பவர்களை அடையாளம் காண்பதுடன் விசாரணைகள் நிறுத்தப்படாமல், முழு வலையமைப்பையும் வெளிக்கொணர வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும்  அவர் வலியுறுத்தினார்.

இந்த இணையக் குற்றங்களுக்குப் பின்னால் மூளையாக செயல்படும் சூத்திரதாரிகளைக் கண்டறிய நிதிப் புலனாய்வுப் பிரிவுடன்  (FIU)  ஒருங்கிணைந்து செயல்படுமாறு அவர் வலியுறுத்தினார். சைபர் கிரைம் விசாரணையில் முழுமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள முயற்சிகள் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். சைபர் கிரைம், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக இருப்பதால், விசாரணை அதிகாரிகள் சட்டத்தின்படி குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிதி விசாரணை மற்றும் சொத்துக்களை முடக்க அதிக முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அதனைத் தொடர்ந்து, மாவட்ட மற்றும் நகர சைபர் கிரைம் காவல் நிலையங்களின் செயல்பாடுகள் பற்றிய விரிவான ஆய்வு நடத்தப்பட்டு, வழக்கில் மேலும் முன்னேற்றம் காண வழக்கு ரீதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பல அதிகாரிகளுக்கு அவர்களின் சிறப்பான பணிக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  கருப்பையா, ஏடிஎஸ்பி, சைபர் கிரைம் காவல் நிலையம், மதுரை மாவட்டம், மற்றும் அவரது குழு ஆன்லைன் வர்த்தக மோசடியை வெற்றிகரமாக விசாரித்து, எட்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வழிவகுத்தற்காகவும்,  வெற்றிசெழியன், ஏடிஎஸ்பி, சைபர் கிரைம் தலைமையகம், இரண்டு வழக்குகளில் அவரது சிறந்த மேற்பார்வைக்காகவும்,  பேசில் சீனிவாசன், டிஎஸ்பி, சைபர் கிரைம் பிரிவு, பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏழு குற்றவாளிகளைக் கைது செய்வதில் துரித நடவடிக்கைகளுக்காகவும் ராகவேந்திர கே. ரவி, டிஎஸ்பி, சைபர் கிரைம் பிரிவு, வாட்ஸ்-அப் ஆள்மாறாட்டம் வழக்கில் தொடர்புடைய  குற்றவாளியை கைது செய்தமைக்காகவும்,  வி. ரோஸ்லைன் சாவியோ, காவல்ஆய்வாளர், மாநில சைபர் கிரைம் புலனாய்வு மையம், சண்டிகரில் இரண்டு குற்றவாளிகளை திறம்பட கைது  செய்தமைக்காகவும்,   ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட ஏழு குற்றவாளிகளை கைது செய்தமைக்காக காவல் ஆய்வாளர் புஷ்பா அவர்களுக்கும் அதிகாரிகளின் குழுவில் பணியாற்றிய அனைத்து காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும்இ உதவி காவல் ஆய்வாளர்கள் முதல் காவல் ஆளினர் வரையிலான 18 காவலர்களுக்கு அவர்களின் பங்களிப்பிற்காக ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சைபர் கிரைம் காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். சைபர் கிரைம்களை எவ்வாறு தடுப்பது மற்றும் இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்படும் குடிமக்களின் கவலைகளை நிவர்த்தி செய்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சைபர் குழுக்கள் மற்றும் தன்னார்வ முன்முயற்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் ஊக்குவிக்கப்பட்டனர். போலீஸ் அதிகாரி/சிபிஐ/டிராய்/சுங்கம் எனக் கூறி, டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு வரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் வரும் மோசடிகளுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டிஜிட்டல் கைது போன்ற எதுவும் இல்லை என்றும்இ இதுபோன்ற அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் பெருமளவில் அதிகரித்து வருவதால், அதிக வருமானத்தை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தவிர, இணைய தளங்களில் எச்சரிக்கையுடன் கையாளுதல் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருத்தல் மற்றும் சந்தேகத்திற்கிடமான பயன்பாடுகளை  நிறுவ  வேண்டாம்  எனவும்  அறிவுறுத்தப்படுகிறது.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.