I am sorry iyyappa – பாடகி இசைவாணி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை கோரி அடுத்தடுத்து போலீசில் புகார் !
“I am sorry iyyappa” பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Iam sorry iyyappa” என்று கான பாடகி இசைவாணி பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கான பாடகி இசைவாணி மற்றும் இந்துக்கள் பற்றி தவறாக திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் பேசி வருவதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு அனைத்து ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழுவினை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்தனர்.
ஐயப்பா பாடல் சர்ச்சை பாடகி இசைவாணிக்கு இயக்குனர் பா.ரஞ்சித் உடந்தையாக இருக்கிறார்- நாங்கள் கொந்தளிப்பாக உள்ளோம் என்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதே விவகாரம் தொடர்பாக, மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் இந்து மகா சபா சார்பில் ஐயப்ப பாடலை இழிவுப்படுத்தி பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநில இளைஞரணி துணைத் தலைவர் இளவரசன் தலைமையில் மனு அளித்தனர்.
அதில் சமூக வளைதலங்களில் நீலம் எனும் இசைக்குழு அமைப்பின் இசைக்குழுவை சேர்ந்த இசைவாணி என்ற பெண் சமூக வளைதலங்கள் மற்றும் (behind takies) எனும் ( YOU TUBE ) பக்கத்திலும் (I’M SORRY IYYAPPA ) எனும் பாடலை பதிவேற்றியுள்ளர்அந்த பாடலில் ஐயம் சாரி ஐயப்பா உள்ளே வந்தால் தீட்டாப்பா?? எனும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இந்த பாடல் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த பெண் தொடர்ந்து இந்து தெய்வங்களை குறிவைத்து கேவாலமாக பாடியுள்ளர். பெரும்பான்மை மக்களின் தெய்வமாக விளங்கும் சபரிமலை ஐயப்பன் மீது தரக்குறைவான பாடலை பாடி மக்கள் மனதை புண்படுத்திய இசைவாணி மீது தக்க நடவடிக்கை வேண்டும் என்று கொடுத்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அகில இந்திய இந்து மகாசபா மாநில இளைஞரணி துணைத் தலைவர் இளவரசன், “தொடர்ந்து இசைவாணி இது போன்று இந்த தெய்வங்களை குறி வைத்து கேவலமாக பாடி வருகிறார். இவருக்கு இயக்குனர் ரஞ்சித் உடந்தையாக இருக்கிறார்.
நாங்கள் மிகுந்த மன வருத்தத்தில் நடிகை கஸ்தூரியை கைது செய்தது நடவடிக்கை எடுத்தது போல பாடகி இசைவாணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக முழுவதும் கொந்தளிப்பு போராட்டம் நடத்துவோம்” என்றார்.
— மணிபாரதி, ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.