கனிம நிதி ரூ 60 லட்சம் அனுமதி இன்றி பயன்படுத்திய ஊராட்சி மன்ற தலைவரின் ‘செக்’ பவர் பறிப்பு !
தேனி மாவட்டம், போடி தாலுகா, மஞ்சிநாயக்கன் பட்டி ஊராட்சியில் கனிமநிதி ரூ.60 லட்சத்தை அனுமதி இன்றி அடிப்படை வசதிக்கான பணிகளை செய்த ஊராட்சித் தலைவரின் ‘செக்’ பவர் நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மஞ்சிநாயக்கன் பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வளையப்பட்டி ஆகிய மூன்று ஊர் ஊராட்சி பொது மக்களின் சார்பில் போஸ்டர் ஒட்டியிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
போடி தாலுகா, கெப்புரெங்கன்பட்டி, வளையப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி ஆகிய மூன்று ஊர் ஊராட்சித் தலைவர் வீரலட்சுமி. இவர் ஊராட்சிக்கான கனிம நிதி ரூ.60 லட் சத்தை முறையான அனுமதி இன்றி சாக்கடை தூர்வாருதல், பைப் லைன் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளார்.
கனிம நிதியை செலவிட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பணிகள் செய்திட வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் செய்ததால் ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியது, அலுவலக நடைமுறையை கடை பிடிக்காதது உள்ளிட்ட தவறுகளை செய்ததாக கூறி மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் வீரலட்சுமியின் ‘செக்’ பவர், வரவு – செலவு கையாளுதல் உள்ளிட்ட பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஊராட்சிக்கு மேலும், நிதி இழப்பு ஏற்படாத வகையில் இதற்கான பொறுப்பை போடி ஒன்றிய பி.டி.ஓ., (கி.ஊ.,) தனலட்சுமிக்கு அதிகாரம் வழங்கி கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊராட்சி செயலாளர் முருகானந்தம் மீது துறைரீதியான விசாரணை நடை பெற்று வருகிறது.
— ஜெய்ஸ்ரீராம்.
மேற்படி ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி மற்றும் அவரது கணவர் அதே ஊராட்சியின் மக்கள் நலப் பணியாளர் R. செல்வன் மற்றும் ஊராட்சி செயலர் முருகானந்தம் அவர்கள் எந்த ஒரு பணியும் செய்யாமல் முறைகேடு செய்த நிதி திருப்ப பெறாதபடி ஊராட்சிகளின் ஆய்வாளர் திட்டமிட்டு மறைக்க திருத்தி எழுதியுள்ளனர். இப்படிக்கு மேற்படி புகார் மனுதாரர். ஆதிவாசி. ப. முருகன்,