சட்டசபை, மாநகராட்சி தேர்தலெல்லாம் மிஞ்சும் ரயில்வே தொழிற்சங்க தேர்தல் பரிசுகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யில்வே தொழிற்சங்க  அங்கீகார தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 4.12.24 தொடங்கி 5,6 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல்
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல்

2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2019-ம் ஆண்டுக்கு பிறகு தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறவில்லை. ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல்  டிச.4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதற்கிடையே, ரயில்வேயில் உள்ள 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வருகின்றன.

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இதன் விளைவாக சட்டசபை, மாநகராட்சி தேர்தலெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ரயில்வே தொழிற்சங்க தேர்தலில் ஆதரவை பெற  வாக்களிக்கும் தொழிலாளர்களுக்கு பணம், பிரியாணி, சரக்கு போன்றவைகளை கொடுக்கிறார்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யு. எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு. எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ். எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இதில், தட்ஷின ரயில்வே ஊழியர்கள் சங்கம், தட்ஷின ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்க், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கீகாரத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தொழிற்சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.