வந்தே பாரத்  ரயிலில் புகை பிடித்தவரை பிடிக்க போலீஸ் தீவிரம் !

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

வந்தே பாரத் ரயில்களில் தீ விபத்தை தவிர்க்க ரயில் பெட்டி மற்றும் கழிவறைகளில் சிறப்பு புகை நுகர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் பெட்டி ஒன்றுக்கு இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

டிசம்பர் 22 அன்று நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628) திண்டுக்கல் அருகே சென்ற போது உயர் வகுப்பு இருக்கை பெட்டியில் புகை நுகர்வு கருவி எச்சரிக்கை ஒலி ஒலிக்க ஆரம்பித்தது இதனால் ரயில் வடமதுரை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பயணிகள் யாரோ ஒருவர் புகை பிடித்ததால் இந்த கருவி எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறது. அந்த நேரத்தில் புகைப்பிடித்த பயணியை கண்டுபிடிக்க இயலாததால், ரயில் அங்கிருந்து புறப்பட்டது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புகைப் பிடித்தவரை பிடிக்க தற்போது ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  தீ விபத்தை தவிர்க்க ரயில் பெட்டி மற்றும் ரயில் நிலைய வளாகம் ஆகியவற்றில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இதை மீறி புகைப்பிடிப்பவர்கள் ரயில்வே சட்டம் பிரிவுகள் 145 பி மற்றும் 167 ஆகியவற்றின் படி கடும் அபராதம் விதிக்கப்படும். எனவே சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் வந்தே பாரத் ரயிலில் புகைப் பிடித்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படை தீவிரமாக முயற்சித்து வருகிறது.

 

  —    ஷாகுல்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.