ரக்ஷிதா மகாலட்சுமியை ரசித்து ‘ஜொள்ளு’ விட்ட டைரக்டர்கள்! –‘எக்ஸ்ட்ரீம்’ ஸ்டேஜ் ஈவெண்ட்!
SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள படம் “Extreme”( எக்ஸ்டிரீம் ). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், டிசம்பர் 09-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் பேசியோர்….
தயாரிப்பாளர் ராஜ்குமார்
“இப்படம் எங்களது இரண்டாவது படம். நண்பன் ராஜவேல் முதலில் ஒரு கதை சொன்ன போது, அதை ஷார்ட் ஃபிலிமாக எடுத்தோம். அந்தப்படம் நிறைய விருதுகள் வாங்கியது, அதில் என் நடிப்பும் பாராட்டப்பட்டது. பின் நாம் ஏன் படம் எடுக்கக் கூடாதென, தூவல் எனும் படத்தை எடுத்தோம், அதுவும் நிறையப் பாராட்டுக்கள் வாங்கியது.
அதன் பின்னர், பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி, இந்தக்கதையைச் சொன்னார். உடனே இதை செய்யலாம் என இதை ஆரம்பித்தோம். என்னை போலீஸாக நடிக்கச் சொன்னார், நான் தயங்கினேன்.ஆனால் ஊக்கம் தந்து நடிக்க வைத்தார், படம் நன்றாக வந்துள்ளது. விரைவில் திரைக்குக் கொண்டு வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி”.
இயக்குநர் ஆர். வி உதயகுமார்
” இந்தப்படம் பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல் தான் கலந்துகொண்டேன். டிரெய்லர் பார்த்த போது, நாம் நினைக்காத விசயத்தை எல்லாம் செய்கிறார்களே என மகிழ்ச்சியாக உள்ளது. டைட்டிலே வித்தியாசமாக உள்ளது. சீகர் பிக்சர்ஸ் நிறைய வெற்றியோடு பயணிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். ரக்ஷிதா மஹாலட்சுமியின் ரசிகன் நான். கடந்த வாரம் ஒரு படம் பார்த்தேன், அருமையாக நடித்திருந்தார்.
இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். அபி நட்சத்திரா அயலி மூலம் கலக்கியவர், இதிலும் நன்றாக நடித்துள்ளார். தொழில் நுட்பக் கலைஞர்களும், மிக அற்புதமாக பணிபுரிந்துள்ளனர். தன் கணவரின் ஆசைக்குப் பின்புலமாக இருந்து படத்தைத் தயாரித்திருக்கும், தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்”.
இசையமைப்பாளர் ராஜ் பிரதாப்
“இயக்குநர் ராஜவேல் பிரதரை எனக்கு மிக நீண்ட காலமாகத் தெரியும், அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, கொஞ்சம் காண்டரவ்ர்ஸியாக தெரிந்தது. முழுதாக கேட்ட போது தான் கதையின் அழுத்தம் புரிந்தது. படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்”.
‘பிழை’ பட தயாரிப்பாளர் தாமோதரன்
“நான் படமெடுக்கும் போது, நடந்த விசயங்கள் நினைவுக்கு வருகிறது. ஒரு படம் ரிலீஸாக வேண்டுமானால் நிறைய பேரின் சப்போர்ட் வேண்டும். அது இந்த குழுவிற்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஒரு படத்தில் எவ்வளவு முடியுமோ அந்தளவு எக்ஸ்டிரீம் சென்று, இந்த படத்திற்காக உழைத்துள்ளனர். ரக்ஷிதா மேடம் மிக நன்றாக நடித்துள்ளார். இயக்குநரைப் பார்க்கும் போது, அந்தக்கால இயக்குநர் பாண்டியராஜன் சார் ஞாபகம் வந்தது வாழ்த்துக்கள். பெரிய படம் போலத் தான் எல்லா சின்னப்படமும் இங்கு எடுக்கிறார்கள், அதே பெரிய படத்திற்குக் கொடுக்கும் சப்போர்ட்டை இந்த படத்திற்கும் தாருங்கள்”.
நடிகை அபி நட்சத்திரா
“இயக்குநர் ராஜவேல் கதை சொன்னபோது நார்மலாகத்தான் இருந்தது, ஆனால் அதில் எவ்வளவு விசயம் இருக்கிறது என்பது படத்தில் நடிக்கும் போது தான் தெரிந்தது. தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
தயாரிப்பாளர் கே ராஜன்
“இந்தப்படம் டிரெய்லர் பார்த்தேன், மனம் விட்டு வாழ்த்த வைத்துவிட்டது. மியூசிக், கேமரா, நடிப்பு எல்லாம் அருமையாக உள்ளது. இயக்குநர் எல்லோரையும் வேலை வாங்கியுள்ளார். இவரின் தூவல் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றனர். அது தமிழ்நாட்டின் சாபம், ஏதோ மொழி புஷ்பா படத்திற்கு 500 திரையரங்குகள் தந்துள்ளார்கள். முதலில் தமிழ்ப்படத்திற்குத் திரையரங்குகள் தாருங்கள், எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? அதனால் எப்போதும் தமிழுக்கு முக்கியத்துவம் தாருங்கள்.
தமிழ் நடிகர்களை நடிக்க வையுங்கள். அதன் பிறகு மற்ற மொழிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். இப்போதெல்லாம் நல்ல கதையுள்ள சின்ன படங்கள் தான் ஜெயிக்கிறது. லப்பர் பந்து படம் பெரிய படங்களைத் தாண்டி ஜெயித்தது. அதை மக்கள் தான் ஜெயிக்க வைத்தார்கள். அது போல் இந்தப்படத்திலும் எல்லா மனமும் மிக நன்றாக உள்ளது. படம் கண்டிப்பாக ஜெயிக்கும் வாழ்த்துக்கள்.
கடந்த வாரம் ஒரு பெரிய படத்தைப் பத்திரிக்கையாளர்கள் தோற்கடித்துவிட்டதாகச் சொன்னார்கள். படம் நன்றாக இருந்தால் யாராலும் அதன் வெற்றியைத் தடுக்க முடியாது. நல்ல படம் எடுங்கள் பத்திரிகையாளர்கள் ஆதரவு தருவார்கள் என்றேன். அதே போல் நல்ல படமெடுத்த இந்தக்குழு ஜெயிப்பார்கள்”..
இயக்குநர் ராஜகுமாரன்
“சீகர் பிக்சர்ஸ் கமலா குமாரி அம்மா, ராஜ்குமார் மற்றும் இயக்குநர் ராஜவேல் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தெளிவாகத் திட்டமிட்டுச் சரியாக வேலை செய்பவர்கள் கண்டிப்பாக ஜெயிப்பார்கள். அந்த வகையில் திட்டமிட்டு நல்ல படைப்பைத் தந்துள்ள இந்தக்குழுவினரும் ஜெயிப்பார்கள் வாழ்த்துக்கள்”.
நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி
“பிக்பாஸ் முடிச்சு வந்தபோது தான் இயக்குநர் எனக்கு போன் செய்தார். அவருக்கு முதலில் என்னை யாரென்று தெரியவில்லை. எனக்கு லுக் டெஸ்ட் எல்லாம் வைத்தார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில், மிகத் தெளிவாக இருந்தார். அவருக்கடுத்து சிவம் மிகக் கடினமாக உழைத்துள்ளார். டிரெய்லர் பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள்.
நான் நடிக்காமலிருந்தாலும் இந்தப்படத்தை வியந்து பார்த்திருப்பேன். அந்தளவு நல்ல கதையம்சம் உள்ள படம். எல்லோரும் எவ்வளவு கடுமையாக இப்படத்திற்காக உழைத்துள்ளனர். படம் மிக அருமையாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி”.
தயாரிப்பாளர் கமலா குமாரி
“மேடைப்பேச்சு தான் எங்களுக்குச் சோறு போடும் தொழில். அதிலிருந்து தான் வந்துள்ளோம். என் கணவர் கனவும் என் கனவும் நனவாக வேண்டும் என்பது தான் ஆசை. அவருக்கு நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை, அதற்காகத் தான் இப்படத்தைத் தயாரித்தோம். அதை மிக நல்ல படைப்பாகத் தர வேண்டும் என்று தான் உழைத்துள்ளோம். ராஜவேல் மிக நல்ல படைப்பைத் தந்துள்ளார். இப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது”.
படத்தின் இயக்குநர் ராஜவேல்
‘எனது ‘பிழை’ படத்தை சென்னையில் ஒரு வாரம் கஷ்டப்பட்டு ஓட வைத்த என் முதல் பட தயாரிப்பாளர் தாமோதரன் அவர்களுக்கு நன்றி. என் வாழ்வில் முக்கியமானவர் சிவம் சார் அவர் தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் கமலகுமாரி, ராஜ்குமார் அவர்களிடம் அழைத்துச் சென்றார். முதலில் ஒரு ஷார்ட் ஃபிலிம் தான் எடுத்தோம் அதற்கே ராஜ்குமார் சார் என்ன கேட்டாலும் தருவார், இந்தப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார்.
என் டீம் எனக்காக எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுப் பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. ஒரு குறுகிய காலத்தில், சின்ன பட்ஜெட்டில் படம் செய்ய முடிந்ததற்குக் காரணம் இவர்கள் தான். பெண்களுக்கான படம் இது, தப்பாகப் போய்விடக்கூடாது என்று தயாரிப்பாளர் தெளிவாக இருந்தார். நானும் கண்டிப்பாகத் தவறாகிவிடாது எனச் சொன்னேன். இன்று ஆடியன்ஸ் மாறிவிட்டனர் ஆனால் திரையரங்குகள் மாறவில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்காத போதும் வெளியூர்களில், எனது தூவல் படம், இரண்டாவது வாரம் நன்றாக ஓடுகிறது. ஆனால் சென்னையில் திரையரங்குகள் தரவில்லை. உலகநாடுகள் முழுதும் 40 விருதுகள் வழங்கி அங்கீகரித்த திரைப்படம், இங்கு மக்கள் ஆதரவு இருந்தும், திரையரங்குகள் தராதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவர்கள் நல்ல படத்திற்குத் திரையரங்குகள் தருவதில்லை. நல்ல திரைப்படங்களைத் திரையிடுங்கள். எனக்கு இந்தப்படத்தில் கிடைத்த வரம் ரக்ஷிதா மேடம் தான். அவருக்குள் ஒரு இரும்புப் பெண் இருக்கிறார். உப்புக்கருவாடு படத்தில் கலக்கியிருந்தார் அதைப்பார்த்துத் தான் நான் அவரை இப்படத்திற்குத் தேர்ந்தெடுத்தேன்.
அபி நட்சத்திரா, ஆனந்த் நாக் எல்லோரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். தயாரிப்பாளருக்கு வெற்றி வரவேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். அதை மனதில் வைத்துத் தான் உழைத்துள்ளோம். ஒரு நல்ல படைப்புக்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்”
இயக்குநர் பேரரசு,
“படத்தை மிகக் குறைந்த காலத்தில் எடுத்ததாகக் கூறினார் இயக்குனர் .இந்த காலகட்டத்தில் ஒரு படத்தை மிக அழகாக பிளான் செய்து, மிக சிக்கனமாக எடுப்பது தான் மிகச்சிறந்த இயக்குநருக்கான திறமை. இவர்கள் அதைத் திறம்படச் செய்து நல்ல படத்தைத் தந்துள்ளார்கள். ரக்ஷிதா கண் பயங்கர ஈர்ப்பாக இருப்பதாகச் சொன்னார் ஆர்.வி. உதயகுமார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஒரு நல்ல விசயத்தைப் பேசும் இப்படத்தை ஆதரியுங்கள்”.
Xtreme என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6 வது சீசன் மூலம் பிரபலமான ரக்ஷிதா மஹாலஷ்மி மற்றும் சமீபத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அயலி படத்தின் மூலம் பிரபலமான அபி நட்சத்ரா, நேரம் படத்தைத் தொடர்ந்து ரெஜினா படங்கள் உட்படச் சிறந்த படைப்புகளில் நடித்துவரும் ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன் அம்ரிதா ஷெல்டர், ராஜ்குமார், சிவம் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : D.J. பாலா சந்தானம் நடித்த பிஸ்கோத், காசேதான் கடவுளடா போன்ற படங்களுக்கு இசையமைத்த ராஜ் பிரதாப் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். டம்ளர் குத்து மற்றும் ஹிப்ஹாப் ஆதி நடித்த ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்த சிவ்ராக் சங்கர் நடனம் அமைக்கிறார். சண்டை பயிற்சியை சிவம் மேற்கொள்கிறார்.
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்.
— மதுரை மாறன்.