சீயான் விக்ரமின்  ‘வீர தீர சூரன் ‘  டீசர் ரிலீஸ்!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

முன்னணி நட்சத்திர இயக்குநர் எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக கலக்கும்  ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ படத்தில்  எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப் படத்திற்கு ஜி.    வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனித்திருக்கிறார். ஆக்சன் த்ரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்தப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் ஏற்கனவே வெளியாகி பதினான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்த நிலையில் இப்போது டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்தி இருப்பதால்… படத்தைப் பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.‌

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சீயான் விக்ரம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட்-2’  2025 ஜனவரியில்  உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.