காலம் உங்களுக்காக கனியுமா ?
கடுமையான காலங்களில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்துக்கொண்டு இருங்கள். அதற்கு உடனடி பலன் கிடைக்காமல் போகலாம். நீங்கள் செய்வது சரியானதா என்று பலர் கேள்வி எழுப்பலாம். பலர் ஏளனம் செய்யலாம்.
ஆனால். உங்களுக்கான காலம் வரும் வரை ஒரு விவசாயியை போல் காத்திருக்க வேண்டும். அறுவடை செய்ய வேண்டும். விவசாயி என்றுமே தவறான காலத்தில் பயிரிடுவதில்லை. பெரிய மகசூல் கிடைக்கவேண்டும் என்று மழை காலத்தில், புயலின் நடுவே விவசாயம் செய்வதில்லை.
சில நேரங்களில் அமைதியாக இருப்பதே நல்லது. நமக்கு ஏற்ற நேரத்திற்காக காத்திருப்பதே நல்லது. அதற்காக சோம்பேறியாக இருக்கக்கூடாது. நமது திறனை பட்டை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் அது உதவும்.
அமிதாப்பச்சனுக்கு இது நேர்ந்தது. இயக்குனர் நெல்சனுக்கு இது நேர்ந்தது. 2010 ஆம் ஆண்டில் அவரது முதல் திரைப்படம் வேட்டை மன்னன் கைவிடப்பட்ட பொழுது அவரது உலகம் இருந்திருக்கும். அவர் செல்லும் பாதை, செயல் மீது விமர்சனம் இருந்திருக்கும். ஆனால், அமைதியாக 8 ஆண்டுகள் இருந்து சரியான நேரத்தில் அவரது திறன் வெளியில் தெரிந்தது. இன்று அவரின் கதை வேறு.
நானும் நீங்களும் இன்று இருக்கும் கடுமையான சூழ்நிலையை பொருட்படுத்தாமல் திறனை சரியான திசையை நோக்கி, நல்ல நட்புகளை நோக்கி எடுத்துச் செல்வோம். காலம் ஒரு நாள் கனியும்.
சாய் விஜயேந்திரன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.