எங்களுக்கு இந்த ஆலை வேண்டாம்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே செயல்படும் மதுபான ஆலையால் குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, குன்னத்தூர் கிராம மக்கள் ஆலையை மூடக் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாகக் குடிநீர் மாசு, பயிர்கள் பாதிப்பு, தோல் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைச் சந்திப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கழிவுநீர் குளங்கள் மற்றும் நிலத்தடி நீரைப் பாதிப்பதாகவும், சுமார் 10 ஏக்கர் நிலத்தில் நாற்றுகள் வளர்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். எனவே, ஆலையை மூட வலியுறுத்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

எங்களுக்கு இந்த ஆலை வேண்டாம்!” 15 ஆண்டுகளாகப் போராடும் கிராம மக்கள்

முழுமையான வீடியோவை காண

Comments are closed, but trackbacks and pingbacks are open.