மதுரை – நடிகர் ரஜினிகாந்திற்கு உற்சவர் , மூலவர் சிலை செய்து யாகம் வளா்த்த ரசிகா் !
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ரஜினிக்கு உற்சவர் , மூலவர் என 2 கல்லால் ஆன சிலை வைத்து பால் பழம், இளநீர், பஞ்சாமிர்தம், பூந்தி அபிஷேகம் மற்றும் அதனை தொடர்ந்து யாகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் நடிகர் ரஜினிகாந்திக்கு திருக்கோவில் அமைத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லாலான ரஜினி சிலை வைத்து தொடர்ந்து ரஜினி சிலைக்கு பால்பழம், இளநீர், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்தும் வருகிறார்.
தற்போது டிசம்பர் 2024 ல் ரஜினியின் 74-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரஜினிக்கு புதிய உற்சவர் கல் சிலை 300 கிலோ எடையில் உருவாக்கி ரஜினியின் திரு உருவசிலைக்கு பால் பழம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பூந்தி ஆகியவைகளால் அபிஷேகம் செய்து, யாகம் வளர்த்து ரஜினிகாந்த் 100 ஆண்டுகள் வாழ்வதற்கு பிரார்த்தனையும் மேற்கொண்டனர்,.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனைத் தொடர்ந்து செய்து வரும் கார்த்திக்கு ரஜினியிடம் இருந்து எந்த ஒரு பாராட்டுகளும், தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.