திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரிக்கை !
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய இனாம்மாத்தூர் மேல்நிலைப்பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட மணிகண்டம் ஒன்றிய இனாம்மாத்தூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
சென்ற வாரம் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக பள்ளியை சுற்றி மழைநீர் சூழ்ந்து உள்ளது.
பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் விஷப்பூச்சிகளின் அச்சுறுத்தலும், தொற்று நோய்கள் பரவும் ஆபத்தான நிலையும், கழிவறைக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளானார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த அவலநிலையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்