கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !

”அடுத்த தேர்தலில் ஆட்சியை இழப்பதற்கு இவர்களைப் போன்ற நாலு அரசு அதிகாரிகள் இருந்தால் போதும்” என்ற நிலையை உருவாக்கிவிட்டது என்பதே மறுக்க முடியாத உண்மை.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !

”ஆசிரியர்களை, அலுவலகப் பணியாளர்களை – ஒருமையில் தான் அழைத்துப் பேசுகிறார். தொலைத்திடுவேன், போட்டுத் தள்ளிவிடுவேன் என்று தான் பேசி வருகிறார். கண்டிக்கும்  காவல்துறையே தற்போது  கனிவான துறையாக மாறி வருகிறது. ஆனால், கல்வித் துறையை இவர் கலவரத் துறையாக மாற்றி வருகிறார்.” என்பதாக, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமாருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார், ஐபெட்டோ, அகில இந்தியச் செயலாளர், வா. அண்ணாமலை.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

”என்னதான் பிரச்சினை?” என்ற கேள்வியோடு, ஐபெட்டோ வா.அண்ணாமலையை தொடர்புகொண்டோம். “ கடந்த டிசம்பர் – 12 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஒன்றியத்திலுள்ள எட்டான்குளம் என்ற ஊரில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கள ஆய்வுக்கு சென்றிருக்கிறார், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார். முதலில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளிகளுக்குத்தான் ஆய்வுக்கு செல்ல முடியும். தொடக்கப்பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் இருக்கிறார்கள்.

இதுஒருபுறமிருக்கட்டும். ஆய்வுக்கு போனவர் வாசல் வழியே செல்லாமல், ஏதோ திருடனை பிடிக்கச் செல்லும் போலீசார் போல சன்னல் வழியாக எட்டிப்பார்த்தவாரே நின்றிருக்கிறார். ஒருவேளை பெண் தலைமையாசிரியராக இருந்திருந்தால், நிலைமை என்னாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதன்பின்னர், உள்ளே நுழைந்திருக்கிறார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார்

தனது கைப்பேசியில் எமிஸ் பதிவுகளை மேற்கொண்டிருந்த தலைமையாசிரியர் டே.பால்துரையிடம் அவரது செல்போனை வாங்கிப்பார்த்து ஆய்வு செய்திருக்கிறார். அடுத்து, அவரது மேசைக்கு எதிரில் அமர்ந்திருந்த பெண்ணை யார் என்று விசாரித்திருக்கிறார். அதே பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரின் தாயார் என்றும்; பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் என்றும்; உடல்நிலை சரியில்லாத தனது மகனுக்கு மாத்திரை வழங்க வந்திருந்தார் என்றும்; காலை உணவு வழங்கல் தொடர்பான பதிவுகளை அவர் எழுதிக் கொண்டிருந்தார் என்றும் தலைமையாசிரியர் விளக்கம் அளித்திருக்கிறார்.

அப்போது, அவரை எப்படி  நாற்காலியில் அமர வைத்து எழுதச் செய்யலாம் என்று  கேட்டவாறே, அந்த பெண்ணை தனது கைப்பேசியில் வீடியோ எடுக்க முயற்சித்திருக்கிறார், முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார்.

நடந்த சம்பவங்களை கண்டு அதிர்ந்து போன அந்த பெண்மணியிடம், “நீங்க போங்கம்மா… ஒன்றுமில்லை” என்று போகச் சொல்லியிருக்கிறார், தலைமையாசிரியர் பால்துரை.

இது தான் அவர் செய்த தவறு. கோபத்தின் உச்சிக்கே சென்ற பாடம் நடத்த பயன்படுத்தி வருகிறீர்களா? கேட்டிருக்கிறார். தலைமையாசிரியர் இல்லை என மறுத்துள்ளார்.

அப்போதும் விடாமல், பள்ளிக் குழந்தைகளிடமும் கேட்டிருக்கிறார். காலை உணவு வழங்கும் பொறுப்பாளர், மாலை நேரத்தில் வீட்டில் டியூஷன் எடுத்து வருபவர் என்பதால், அவர்களுக்கு தெரிந்த முறையில் டீச்சர் என்றிருக்கிறார்கள். அவ்வளவுதான். அங்கிருந்தபடியே, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு, தலைமையாசிரியர் பால்துரையை உடன் தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணை வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் - வா. அண்ணாமலை
அமைச்சர் அன்பில் மகேஸ் – வா. அண்ணாமலை

”அவர் நல்ல தலைமை ஆசிரியர். மாணவர்களுக்கும் முன்பாக, காலை 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கு செல்பவர். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். பணி நிறைவு பெற  இன்னும் நான்கு மாதங்களே  உள்ளது.” என்று நடவடிக்கை எடுக்க தயங்கியிருக்கிறார். மேலும், “நானே நேரில் சென்று  பார்வையிட்டும் அதன் பின்னர்  பார்த்துக் கொள்ளலாம்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

‘’Superior’’ நான்  சொல்கிறேன்… உடனே தற்காலிக பணி நீக்க ஆணை வழங்குமா…”  என அங்கிருந்தபடியே உத்தரவிட்டிருக்கிறார், சி.இ.ஓ. சிவக்குமார். இதற்கு மேல் தாமதித்தால் நமக்கும் வம்பாகிவிடும் என்று நினைத்த மாவட்ட கல்வி அலுவலர், தனது சி.இ.ஓ. சொன்னபடி தற்காலிக பணிநீக்க ஆணையினை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள் முதன்மைக் கல்வி அலுவலரின்  நேர்முக உதவியாளர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அலுவலர் (APO) இருவரும் ”பால்துரை ஒரு  நல்ல தலைமை ஆசிரியர், அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டாம்” என வலியுறுத்தியுள்ளார்கள். ஆனாலும், இவையெதையும் அவர் பொருட்படுத்தவில்லை.

இங்கு என்றில்லை, இவர் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியை தொடங்கிய திருப்பூர் – தாராபுரம் தொடங்கி,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய தஞ்சாவூர், திருச்சி என எல்லா இடங்களிலுமே ஆசிரியர்கள் பணியாளர்களிடம் அன்பாக அணுகியதில்லை. மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியர்களை ஒருமையில், வா, போ என்று அழைப்பது; தொலைத்திடுவேன், போட்டுத் தள்ளிவிடுவேன் என்று மிரட்டுவது என்பதாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்.

இதுவரை அவர் பணியாற்றிய எல்லா இடங்களிலுமே இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி அதன் காரணமாக வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

வா.அண்ணாமலை, ஐபெட்டோ
வா.அண்ணாமலை, ஐபெட்டோ

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மாணவர்களின் நலன் சார்ந்து, ஆசிரியர்கள் நலன் சார்ந்து இவர் இதுபோன்ற கெடுபிடிகளை காட்டியிருந்தால்கூட சரி என்று சொல்லலாம். எல்லா இடங்களிலுமே தனது ஆதிக்கத்தை, தனது அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்பதே இவரது அணுகுமுறையாகவே இருந்து வந்திருக்கிறது.

உதாரணமாக, இப்போதைய திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடக்கக்கல்விக்கு இரண்டு அலுவலர்கள்; இடைநிலை கல்விக்கு ஒரு அலுவலர்; தனியார் பள்ளிகளுக்கு ஒரு அலுவலர் என நான்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் இருக்கிறார்கள். இவர்களை மேற்பார்வையிட, தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிக்கென்று உள்ள ஒரு இயக்குநர் இருக்கிறார்கள். ஆனாலும், திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரை இந்த நான்கு கல்வி அலுவலர்களும் தங்கள் பேனாவின் மூடியினைக்  கூட சி.இ.ஓ. சிவக்குமார் அனுமதி இல்லாமல் திறக்கக் கூடாது என்ற மன நிலையில் செயல்படுத்தி வருகிறார்.

மாவட்டக்  கல்வி அலுவலர் பொறுப்பு வழங்கும் போது பணி மூப்பு அடிப்படையில் உள்ளவரை பரிந்துரை  செய்வதில்லை. உயர் நிலை  / மேல்நிலைப் பள்ளி இயக்கப் பொறுப்பாளர்கள் கேட்டால்,  ”எனக்கு பிடித்தமானவர்களைத்தான்,  நான்  பரிந்துரை செய்து நியமனம் செய்வேன்” என்கிறார்.

அதுமட்டுமில்லை, தனக்கு வேண்டியவர்கள் என்ற ஒரு வட்டத்தை உருவாக்கி, அவர்களை வைத்துக் கொண்டு தனக்கு  பிடிக்காதவர்களை  அவர்களிடம் சொல்லி புகார் விண்ணப்பங்கள் எழுதச் செய்து  விசாரணை  என்ற பெயரால் பார்வையிட்டு பழிவாங்கி வருவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

முன்னரே சொன்னது போல, இதற்கு முன்னர் இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாமே பிரச்சினைதான். கடந்த 2020 இல், இதே திருநெல்வேலியில் மாவட்டக்  கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ஒரு பெண் அலுவலரை  பலர் முன்னிலையில் உங்கள் நிர்வாகமும் உங்களைப் போன்று “சேரி நிர்வாகமாகத்தான் உள்ளது”  என்று கேட்டு அவமானப்படுத்தியிருக்கிறார். அதே  காலகட்டத்தில், சேரன்மகாதேவி  மாவட்டக் கல்வி  அலுவலராக பணியாற்றி வந்தவரிடமும்  இனத்தை இழிவுபடுத்துகிற வகையில் பேசியுள்ளார்.

ஆசிரியர்களிடமும்   இப்படித்தான்  பேசி வந்திருக்கிறார். தற்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். இதுபோன்ற விசயங்கள் வெளியே பரவிய நிலையில், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் தலையிட்டு சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் ஒட்டியதால்  உடனடியாக மாறுதல் செய்யப்பட்டார். இப்போது மீண்டும், இதே மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் வந்திருக்கிறார்.

முக்கியமாக, தொடக்க பள்ளிகளுக்கும் இவருக்கும் சம்பந்தமே கிடையாது. அதனை நிர்வகிக்க, மாவட்ட கல்வி அலுவலர்கள் இருக்கிறார்கள். தஞ்சாவூரில் முதன்மை கல்வி அலுவலராக இருந்தபோது, தொடக்கப்பள்ளிகளுக்கு ஆய்வுக்கு சென்று பிரச்சினை ஆனது. அங்கிருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டார். சில மாதங்கள் அமைதியாக இருந்தார். பழையபடி, தனது வேலையை காட்ட ஆரம்பித்தார். ஏதோ குற்றவாளியை தேடிப் பிடிக்க கிளம்பி போற மாதிரி, முப்பது நாப்பது பேரை கூட்டிகிட்டு, ஒவ்வொரு ஒன்றியமா ‘டீம் விசிட்’னு போனாரு. காலையில் ரெய்டை நடத்திவிட்டு, அதே நாள் மாலையில் மீட்டிங் என்பார். பெண் ஆசிரியர்கள் உள்ளனர் என்ற சிந்தனை கூட இல்லாமல்  இரவு எட்டு மணி வரையிலும்கூட கூட்டம் நடத்துவார்.

கல்வி அமைச்சருடன் தான் நெருக்கமாக இருப்பதாக இவர் காட்டிக் கொள்கிறார். அந்த தைரியத்தில்தான் இவர் இப்படி நடந்துகொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்போதே, இதனை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறோம். அவர் இதுபோன்ற ரெய்டு நடவடிக்கையை தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து திருச்சியில் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம்.

இதனையடுத்தே, துணை இயக்குனராக சென்னையில் பணியிட மாறுதலில் அனுப்பினார்கள். இதற்கிடையில், எப்படியோ மீண்டும், முதன்மை கல்வி அதிகாரியாக அதுவும் ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கிய அதே திருநெல்வேலி மாவட்டத்திற்கே பணியிட மாறுதல் பெற்று வந்துவிட்டார்.

எட்டான்குளம், தலைமையாசிரியர் டே.பால்துரை, தற்காலிக பணியிடை நீக்கம் தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் , ஆசிரியர்கள் சிலரிடம் பேசி அவர்களிடம் பெற்ற தகவல்களிலிருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். மேற்படி தகவல்களை கொடுத்தது யார் என்று விசாரித்தும், இன்னாரென்று சந்தேகப்படுபவர்களையும் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் பேசி வருவதாக அறிகிறேன்.

சாதிய ரீதியில் அதிகாரிகளை அணுகுவது; ஆசிரியர்களை பழிவாங்குவது; அவர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது என இவரது செயல்பாடுகளால் ஆசிரியர்களும் அதிகாரிகளும் அன்றாடம் கடும் மன உளைச்சலை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இதற்கு முன்னர் மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என “அதிகாரி” என்றே அழைத்து வந்தார்கள். அதனை மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என “அலுவலர்” என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற மாற்றம் வந்தது. ஆனால், இப்போதும் போலீசு அதிகாரியைப் போல, கல்வித்துறையில் தன்னை ஒரு “அதிகாரி”யாகவே கருதிக்கொண்டு ஆசிரியர்களிடம் இதுபோன்ற மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

இச்சூழலை கருத்திற்கொண்டு, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  சிவக்குமாரை உடன் மாறுதல் செய்து துணை இயக்குனர் போன்ற பதவிகளில் – இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துதான் தீர்வு காண முடியும்.” என்கிறார், ஐபெட்டோ அண்ணாமலை.

சர்ச்சை மற்றும் குறிப்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான விளக்கம் அறிய, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.

நாம் விசாரித்த வகையில், தஞ்சை மற்றும் திருச்சியில் இவர் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய சமயங்களில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உறவினர் என்பதாக சொல்லிக்கொண்டும்; அரசு நிகழ்வுகளில் அமைச்சருடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொள்வார் என்கிறார்கள். இதன்காரணமாகவே, இவரது அதிகார அத்துமீறல்களை ஆசிரியர்கள் சகித்துக்கொண்டு சென்றனர் என்கிறார்கள்.

மதுரையில் விசிக கொடிக்கம்பம் விவகாரம், சுற்றுச்சூழல் ஆர்வலர் ப்யூஷ் மனூஷ் தனக்கு சொந்தமான நிலத்தில் டேன்சுவாமி சிலை வைக்க முயற்சித்ததை எதிர்த்த விவகாரம் ஆகியவற்றில், அதிகாரிகள் நடந்துகொண்ட விதம், ”அடுத்த தேர்தலில் ஆட்சியை இழப்பதற்கு இவர்களைப் போன்ற நாலு அரசு அதிகாரிகள் இருந்தால் போதும்” என்ற நிலையை உருவாக்கிவிட்டது என்பதே மறுக்க முடியாத உண்மை.

– இளங்கதிர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.