வெள்ளை அறிக்கையை கொடுக்க தயாராக இருக்கிறோம் – அண்ணாமலை பேட்டி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது, 36 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை  மீண்டும் கொடுக்க தயாராக இருக்கிறோம்; அண்ணாமலை மதுரையில் பேட்டி.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடைபெறுகிற கட்சியினரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

திருப்பதி போனால் ஒருநாள் முழுவதும் நிற்பார்கள்., தற்போது என்ன பிரச்சனை என திருச்செந்தூரில் அறநிலையத்துறை அமைச்சர் திருச்செந்தூரில் பேசுகிறார்.. உள்ளத்தில் இருப்பது தற்போது வெளியில் வந்துள்ளது. என சேகர்பாபுவை சாற்றினார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கோவிலுக்கு செல்லக்கூடிய எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்டியல் வசூல் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில் அடிப்படை வசதிகள் இல்லை என்றார்.

அதனால்தான் பாஜக சார்பாக இன்று மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் இருந்து பேசுகின்றோம் தமிழகத்தில் அறநிலையத்துறை இருக்கிறதா ??

சேகர் பாபு நடவடிக்கையை அதற்கு சாட்சி என்றார்.

சென்னை ஐஐடி., இந்தியாவில் அவருடைய துறையில் பெரியார் நிபுணர்..அவருக்கு அவர் சார்ந்த இருக்கக்கூடிய மதத்தின் மீது பற்று இருக்கிறது அதில் தவறு கிடையாது.

மார்கழி மாதத்தில் பாராயணம் பாடுவது தவறு கிடையாது பசுமாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது தவறு கிடையாது, அது அவருடைய கோட்பாடு என்றும் வகுப்பறை மாணவர்களுக்கு அவர் சொல்வது கிடையாது., அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு அதை குறை கூறக்கூடாது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அதை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்., தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி தெரியும் அவருடைய சாதனையை தெரியும்.

Al தொழில்நுட்பத்தில் சிறந்த பேராசிரியராக இருந்து வருகிறார், 2026 எத்தனை அமாவாசை இருக்கின்றது என்று கணக்கு செய்து கொள்ளுங்கள். எத்தனை பௌர்ணமி இருக்கிறது என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்., அதற்குப் பிறகு இந்த ஆட்சி இருக்காது.

முதல்வர் இந்த மீனாட்சி கோவில் வாசல் பகுதி நடந்து மக்களிடம் கேட்டால் தான் தற்போதைய நிலை தெரியும், ஒரு சமுதாயத்தினுடைய ஓட்டு வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக வைத்து விளங்கினார் அதிமுகவினர்.

மைனாரிட்டி இடமிருந்து வாக்கு வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜகவை விட்டு பிரிந்தது,  நாம் நாமாக இருந்தால் இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் அனைவருமே ஆதரவு தருவார்கள்.

கொள்கை ரீதியாக அரசியலை நாங்கள் முன்னெடுத்து இருக்கின்றோம், அறநிலையத்துறை அகற்றுவோம் என்கின்ற நிலையை எத்தனை கட்சிகள் ஏற்றுக்கொள்ளும்.என்றார்

எங்களைப் பொறுத்தவரை ஒரு தனி பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறது., திமுகவினரை பற்றி ஒன்றுமே புரியவில்லை.

செலெக்ட்டிவ் அமானுஷ்யா என்கின்ற ஒரு நோய் வந்துவிட்டதோ என்ற ஒரு சூழ்நிலை உள்ளது போல தெரிகிறது.

தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது, 36 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை  மீண்டும் கொடுக்க தயாராக இருக்கிறோம். அமைச்சர் தங்கம் தென்னரசு எந்தத் திட்டத்திற்கும் அவர்கள் நிதி ஒதுக்கவில்லை என்று தெளிவாக சொல்லுங்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தங்கம் தென்னரசு குறித்து

திமுக அமைச்சர்கள் குறித்து ஒன்றுமே புரியவில்லை. இவர்களுடைய அரசியலுக்காக மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும், சென்னை மெட்ரோ கொடுத்த கேள்விக்கு ? காதுகளில் பஞ்சு வைத்து அடைத்திருக்கிறார்களா இல்லை கண்களை மூடி இருக்கிறார்களா..? வரும் மத்திய அரசு பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவருடைய ஆட்சியின் அவலத்தை மறைப்பதற்காக மத்திய அரசு இது குறை சொல்லி வருகிறார்கள்., ஐந்து வருடத்தில் ஒரு தொகுதியில் மக்கள் நான்கு முறை ஓட்டு போட்டார்கள் என்றால்.

ஒரே குடும்பத்தில் மாறி மாறி நிறுத்தினால் மக்களுடைய நிலைப்பாடு தான் என்ன ?? எங்களை பொறுத்தவரை 9 மாதத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் ஒரு வேண்டாத வேலை., என்று இந்த தேர்தலை நாங்கள் பார்க்கின்றோம்.

பிரதமர் இங்கே வந்தவுடன் முதலமைச்சர் போட்டி போட்டு கை கொடுக்க கவனம் செலுத்துகிறார்., ஆனால் போட்டியை எங்கு காட்ட வேண்டுமோ அங்கு காட்ட வேண்டும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

முன்னாள் அமைச்சர் ஆளுநர் மீது ஆபாசமாக போஸ்டர் ஒட்டுவதும் …வசை பாடுவது குறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்.  திமுக ஆட்சியின் மீது இருக்கக்கூடிய வெறுப்பை மறைப்பதற்கு ஆளுநரை பகடைக்காய் காட்டுகிறார்கள்.

கோவில் பொறுத்தவரை தவறான கையாடல் இவர்களிடத்தில் இருக்கிறது. கோவிலை மட்டும் ஆகம விதிப்படி ஒரு முறையான கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும்.

இதற்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட பகுதியில்.அதை சரி செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு இது கேடாக விளையும் .என்பது மக்களின் கருத்து. பதவி என்பது வெங்காயம் உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது….எதுவாக இருந்தாலும் தினமும் மக்களோடு இருக்க வேண்டும்.

பதவி என்பது அலங்காரம் யாராக இருந்தாலும் களத்தில் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் வீதியில் கால் பட வேண்டும்., பொறுப்புகளோ பதவிகளோ எப்போதும் இல்லை அடையாளப்படுத்தியது கிடையாது.

பாஜகதிட்டம் எப்போதுமே எங்களுக்காக பார்த்ததில்லை. நாட்டிற்கு நல்லது என்பதனால் இந்திய மக்களுக்கும் நல்லது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு ….

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷா குறிக்க பாலியல் வழக்கு குறித்த கேள்விக்கு..? மதுரையை பொறுத்தவரை குறிப்பிட்ட நபர் ஏப்ரல் 2024 காவல்துறை அவர் மீது வழக்கு பதிந்தார்கள்., நான் ஒரு கட்சியின் தற்போது புதிதாக ஆவணங்கள் இருக்கின்றது என்று பதிவு செய்திருக்கிறார்கள் காவல்துறை போட்ட முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றம் ரத்து செய்து இருக்கிறது., கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து காவல்துறை மீண்டும் ரிவோப்பன் செய்து தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறது.

நீதிமன்றத்தில் அந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. பாஜக மீது அனைத்து பகுதிகளிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்து வருகிறது. அவர் நல்லவர் கெட்டவர் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.

அவருக்கு இது போல் நடந்திருக்கின்றது என்பதை இங்கு கருத்தாக வைக்கின்றேன். மதுரை நண்பர்கள் எங்களது ஊருக்கு வரவேண்டும் ஒவ்வொரு ஆண்டும் பதவிக்கு நாங்கள் காவடி எடுப்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

சாட்டையால் அடித்துக் கொள்ளக்கூடிய வழக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும். இன்று தமிழக அமைச்சருடைய சிறப்பை தூக்குவதற்கு சில ஆட்கள் இருக்கிறார்கள். கோயம்புத்தூர்ல என் வீட்டு கோவையில் எனது வீட்டிற்கு விருந்தாளியாக வாருங்கள் உங்களுக்குப் பிடித்த நல்ல உணவை கொடுத்து சாட்டை உங்களிடம் கொடுக்கிறேன் நீங்கள் இரண்டடி வேண்டாம் ஆறடி என் மீது அடியுங்கள் (திமுகவினர் மீது சந்தேகம் இருந்தால் சாட்டை என் மீது பூஜை அறையில் உள்ளது நல்ல பணி செய்யக்கூடிய கவர்னர் மீது ஏன் மாற்ற  வேண்டும்., முதலமைச்சருக்கு கவர்னர் மீது இருக்கக்கூடிய பயத்தில் இது போன்று பிதற்றுகின்றார்.

தற்போது என்னுடன் வாருங்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மதுபானக்கூடங்களை நான் காட்டுகின்றேன். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் டாஸ்மார்க் தான் நம்பர் ஒன்., ஆனால் ரேஷன் கடைகளில் உங்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை என்றார்.

 

—   ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.