திருவரங்கத்தில் தேமுதிக முப்பெரும் விழா – ஆர்.பாரதிதாசன் அழைப்பு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தேமுதிக 22 -ம் ஆண்டு தொடக்க விழா, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் 14.10.2026  (புதன்கிழமை) மாலை 5 மணி அளவில் திருவரங்கம் மீன் மார்க்கெட் அருகில் நடைபெறுகிறது. மாவட்டத் துணைச் செயலாளர் சதீஷ்குமார் வரவேற்று பேசுகிறார். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் பாலாஜி, திருவானைக்காவல் பகுதி செயலாளர் புகழேந்தி,மாவட்ட கழக அவைத் தலைவர் கவுன்சிலர் அர்ஜுன்,மாவட்ட பொருளாளர் வசந்த் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர், முன்னாள் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

கூட்டத்தில் கழகத் துணைச் செயலாளரும்,டெல்டா மண்டல பொறுப்பாளருமான முன்னாள் எம்எல்ஏ எஸ்.செந்தில்குமார் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த கூட்டத்தில் மாநில மாற்றுத்திறனாளிகள் பிரிவு துணைச் செயலாளர் வாஞ்சி குமாரவேல்,கழக விவசாய அணி துணை செயலாளர் சரவணன்,தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முல்லை சந்திரசேகர்,தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் திருப்பதி,தலைமைக் கழக பேச்சாளர்கள் வேதமுத்து,தீப்பொறி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

முடிவில் ஸ்ரீரங்கம் பகுதி 3 -வது வட்டச் செயலாளர் ரங்கன் நன்றி கூறுகிறார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் ஆர். பாரதிதாசன் அழைப்பு விடுத்துள்ளார். முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஆர்.பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.