இந்த வார வேலைவாய்ப்பு செய்திகள் 15.10.2026 – 21.10.2026
உச்ச நீதிமன்றத்தில் காலியிடங்கள்
உச்ச நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட்’பிரிவில் மொத்தம் 250 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
கூடுதல் தகுதி: கம்ப்யூட்டரில் நிமிடத்துக்கு 35 வார்த்தை தட்டச்சு செய்யும் திறன் தேவை.
வயது: 18-30 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசி நாள்: 28.10.2026
விவரங்களுக்கு: sci.gov.in
மத்திய அரசில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்படும் ‘சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்’ நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புராஜக்ட் இன்ஜினியர் 38, புராஜக்ட் டெக்னீசியன் 20, சீனியர் புராஜக்ட் இன்ஜினியர் 15, புராஜக்ட் அசோசியேட் 15 என மொத்தம் 88 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,
வயது : 18 – 45 (26.10.2026ன் படி)
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : இல்லை
கடைசிநாள் : 26.10.2026
விவரங்களுக்கு : careers.cdac.in
ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் (எச்.ஏ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஜூனியர் எக்சிகியூட்டிவ்’ பிரிவில் மெக்கானிக்கல் 78, எலக்ட்ரிக்கல் 25, எலக்ட்ரானிக்ஸ் 21, சிவில் 7, கம்ப்யூட்டர் 6 உட்பட மொத்தம் 150 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்.,
வயது : 18 – 28 (17.10.2026ன் படி)
தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள் : 17.10.2026
விவரங்களுக்கு : hal-india.co.in
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (என்.ஐ.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாக அதிகாரி பிரிவில் ஜெனரல் 200, ரிஸ்க் இன்ஜினியர்ஸ் 28, ஆட்டோமொபைல் 20, நிதி 20, சட்டம் 20, ஐ.டி., 10 உட்பட மொத்தம் 321 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு / பி.எல்., / பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ.,
வயது : 21 – 30 (1.10.2026ன் படி)
தேர்ச்சி முறை : பிரிலிமினரி, மெயின் தேர்வு
தேர்வு மையம் : சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட 12 இடங்கள்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள் : 28.10.2026
விவரங்களுக்கு : nationalinsurance.nic.co.in
வங்கியில் மேனேஜர் பணி
மத்திய அரசின் கீழ் செயல்படும் ‘எக்சிம்’ எனும் ஏற்றுமதி இறக்குமதி இந்தியா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணை மேனேஜர் 6, மேனேஜர் 2 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : எம்.பி.ஏ., / பி.ஜி.டி.பி.ஏ., / சி.ஏ.,
வயது : 18 – 33 (31.8.2026ன் படி)
அனுபவம் : தொடர்புடைய பிரிவில் குறைந்தது ஓராண்டு பணி
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசிநாள் : 21.10.2026
விவரங்களுக்கு : eximbankindia.in






Comments are closed, but trackbacks and pingbacks are open.