வேலைவாய்ப்பு முகாம் – வெற்றிகரமாக நிறைவு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பொதுமக்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில், Hope Foundation – Omega Centre of Hope இலவச வேலைவாய்ப்பு & இலவச திறன் பயிற்சி மையம் சார்பில் 14.11.2026 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கின. வேலைநாடுநர்களும் நிறுவனப் பிரதிநிதிகளும் ஒரே இடத்தில் சந்தித்து, தங்களுக்குத் தேவையான பணியாளர்களையும் வேலைவாய்ப்புகளையும் கண்டறிந்து இருதரப்பினரும் பயனடையும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

முகாமின் சிறப்பம்சங்கள்:

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

  • 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
  • 300-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
  • 50-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றனர்.
  • 100 வேலைநாடுநர்கள் அடுத்தகட்ட நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் பல வேலைநாடுநர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது. மேலும், நிறுவனங்களுக்கும் தங்களுக்குத் தேவையான திறமையான பணியாளர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

வேலைவாய்ப்பை உருவாக்கி, இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் எங்களின் சமூக நல முயற்சியின் ஒரு முக்கிய நிகழ்வாக இந்த வேலைவாய்ப்பு முகாம் அமைந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.