இணையதளத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் கூலிப்படையினர்!
- இணையதளம் இன்று கருத்துச் சுதந்திரத்திற்கான களமாக மட்டுமல்லாமல், திட்டமிட்ட அவதூறுகளுக்கான தளமாகவும் மாறி வருகிறது.
- சமூக வலைதளங்களில் ஆன்லைன் கூலிப்படையினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- பணத்திற்காகப் பிறரின் கருத்துகளைத் தாக்குவதும், தனிநபர்களைக் குறிவைத்து அவதூறு பரப்புவதும் தொடர்கிறது.
- உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை மறைத்து, போலியான பிம்பங்களை உருவாக்குகின்றனர்.
- அரசியல், சாதி, மதம் எனப் பல்வேறு அடையாளங்களின் பெயரில் வெறுப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
- ஒருங்கிணைந்த கணக்குகள் மூலம் ஒரே கருத்தை ஆயிரக்கணக்கானோர் பேசுவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.
- விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள், விமர்சிப்பவர்களை மிரட்டுவதையும் அவமானப்படுத்துவதையும் ஆயுதமாக்குகின்றனர்.
- இதனால் சுதந்திரமாகக் கருத்துச் சொல்லும் ஜனநாயக வெளியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது.
- பணம் கொடுத்து உருவாக்கப்படும் டிஜிட்டல் கூட்டங்களைவிட, ஆதாரங்களுடன் பேசும் குடிமக்களின் குரலே வலிமையானது.
- இணையம் உண்மையின் களமாக இருக்க வேண்டுமே தவிர, ஆன்லைன் கூலிப்படையினரின் அவதூறு சந்தையாக மாறிவிடக் கூடாது!
Comments are closed, but trackbacks and pingbacks are open.