பழனிசெட்டிபட்டி – விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைத்த பேரூராட்சி மன்ற தலைவர்கள் !
பொதுமக்களுக்கு இடையிலாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் விதிமுறைகளை மீறி சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படும் வகையில்சாலை ஓரங்களில் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள் வைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கடந்த 11.1.2022 ஆண்டு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஏராளமான இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் வைத்த காதணி விழாவிற்கு ஏராளமான இடத்தில் சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோல் தற்பொழுது பேரூராட்சி மன்ற தலைவர் பிறந்தநாள் விழாவிற்கு ஏராளமான இடங்களில் பொதுமக்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் வகையில் சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர்கள் என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
எனவே பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ள பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
— ஜெய்ஸ்ரீராம்.