அத்துமீறி சோலார் பேனல் நிறுவனம் ! முற்றுகையிட்ட விவசாயிகள் !
விவசாய நிலங்களில் அத்துமீறி தனியார் சோலார் பேனல் நிறுவனம், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உயர் மின் கோபுரங்கள் அமைத்து வயர் அமைக்கும் பணியில் ஈடுபட்டதால் விவசாயிகள் முற்றுகை.
தேனி மாவட்டம், ஜங்கால்பட்டி ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் அனுமதி இன்றி அத்துமீறி மின் கோபுரங்கள் அமைத்து வயர் இழுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேப்பம்பட்டி பகுதியில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரங்கள் இங்கிருந்து மதுரைக்கு உயர் மின் கோபுரங்கள் அமைத்து கொண்டு செல்லப்படுகிறது.
இதனை தடுத்து நிறுத்த விவசாயிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நீதி மன்ற தடை உத்தரவை மீறி சோலார் பேனல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரங்களை உயர்க கோபுரங்கள் அமைத்து கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து மின் கோபுரங்கள் அமைத்து வயர் இழுக்கும் பணி நிறுத்தப்பட்டது.
— ஜெய்ஸ்ரீராம்.