நட்சத்திர ஹோட்டலில் செஃப்-ஆக என்ன செய்ய வேண்டும்? ஹோட்டல் துறை என்றொரு உலகம் பகுதி – 9

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஹோட்டல் தொழில் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சமையல்தான். அப்படிப்பட்ட சமையல் கலைஞர்களுக்கு முந்தய  காலத்தைவிட தற்காலத்தில் மரியாதையும் கௌரவமும் அதிகமாக கிடைக்கிறது.

நமக்கெல்லாம் தெரிந்த செஃப் தாமு அவர்களுக்கு நமது நாட்டின் குடிமகன்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது தனது துறைக்கான பங்களிப்புக்காக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது என்பது சமையல் கலைக்கான அங்க்கீகாரமாகக் கொள்ளலாம்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

செஃப் தாமு
செஃப் தாமு

இந்த தொடரில் செஃப் தாமு அவர்களை பாராட்டுவதில் நாமும் பெருமை கொள்கிறோம். ஹோட்டல் துறையின் பெருமை இன்று நாட்டின் பெருமையாகியதை நினைத்து பெருமிதம் அடைகிறோம்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சமையல் கலைஞராக வேலைக்கு செல்ல பல வகையான நிறுவனங்களில் வாய்ப்புள்ளது. அவை star hotel, சைவ restaurant, அசைவ restaurant, bakery, கப்பல், விமானம், ரயில்வே, கல்வி நிறுவன கேண்டீன், பெரிய தொழில் நிறுவன கேண்டீன், மருத்துவமனை, ராணுவம், சொந்த தொழில், அவுட்டோர் கேட்டரிங் என்ற ஆர்டர் கேட்டரிங், pizza shops, fast food, chicken outlets, cloud kitchen, process foods, juice outlets, salad shops, ice cream shops sweet shops, என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. மேலும் புதுப்புது வகையாக தொழில்கள் உருவாக்கும் வாய்ப்பு செஃப் (chef) என்பவருக்கு உள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கேட்டரிங் படிப்பில் Food Production எனப்படும் பாடமே chef ஆவதற்கு தேவையான பாடம் ஆகும். பொதுவாக கிட்சன் என்று சொல்வோம். இது ஹோட்டலில் ஒரு துறையாகும். இந்த துறைக்குள் பல்வேறு பகுதிகள் உள்ளன. உலகின் பல உணவுகளைப் பற்றியும் கற்றுக் கொள்ள கேட்டரிங் படிப்பு உதவும்.

தென்னிந்திய உணவு, வட இந்திய உணவு, சைனீஸ், தந்தூரி, ஐரோப்பிய உணவு, பேக்கரி, இறைச்சிப் பகுதி, குளிர் உணவுப் பகுதி, pantry எனப்படும் டீ, காபி பகுதி போன்ற பகுதிகளைப் பற்றி கற்றுக் கொள்வது கேட்டரிங் படிப்பாகும். அதேபோல் வேலைக்குப் போகும்போது, இந்த பகுதியில் ஏதேனும் ஒரு பகுதியில் வேலையை துவங்குவார்கள், அனுபவம் வரும்பொழுது அனைத்துப் பகுதிகளிலும் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பின் மூலம் Chef ஆகலாம் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா? Chef என்பது English கிடையாது. அது ஒரு பிரஞ்ச் வார்த்தையாகும். உலகத்தில் அதிக உணவு வகைகள் ருசிக்கும் நாடு பிரஞ்ச் ஆகும். அதனால் கேட்டரிங் படிப்பில் பல உணவின் கல்விச் சொற்கள் பிரஞ்ச் மொழியில் இருக்கும், ஆனால் பயப்பட வேண்டியதில்லை. இன்னொரு மொழியையும் பல உணவு வகைகளையும் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

செஃப் என்ற வார்த்தையின் அர்த்தம் Skilled professional cook என்பதாகும். திறமை வாய்ந்த தொழில் ரீதியான சமையல் கலைஞர் என்பதுதான் அர்த்தம். அவ்வாறு திறமை வாய்ந்தவராக மாறுவதற்காகத்தான் பலரும் விரும்புவர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஒரு நட்சத்திர விடுதியில் தலைமை செஃப் ஆக வருவதற்கு கீழிருந்து மேலாக 7 முதல் 10 பதவிகள் இருக்கும். அவ்வளவு பதவியின் செல்பாடுகளும், அனுபவமும் உள்ளவரே தலைமை செஃப் ஆக உருவாக முடியும்.

நாம் சாப்பிடும்பொழுது ஒரு செஃப் வந்து பேசினால், மிகவும் மனநிறைவாக இருக்கும். இந்த பழக்கம் இப்பொழுது பரவலாக நடைமுறைக்கு வந்துள்ளது. நம்மிடம் பேசிப் பழகி உணவு சமைப்பதும் அம்மாவின் சமையல் ருசிப்பதற்கும் ஒரு முக்கிய காரணமாகும்.

அதைப் போலத்தான், ஒரு செஃப், சாப்பிடுபவரிடம் பேசி அவரிடம் என்ன பிடிக்கும்? என்ன தேவை என்பதை உணர்ந்து சமைத்தால் மிகவும் வெற்றிகரமான செஃப் ஆக உணரப்படுவார்.

மேற்கோள்கள் :

ஒரு நட்சத்திர விடுதியில் தலைமை செஃப் ஆக வருவதற்கு கீழிருந்து மேலாக 7 முதல் 10 பதவிகள் இருக்கும். அவ்வளவு பதவியின் செல்பாடுகளும், அனுபவமும் உள்ளவரே தலைமை செஃப் ஆக உருவாக முடியும்.

ஒருவர் செஃப் ஆக வேண்டும் என்றால், சாப்பிடுவதை விரும்புவதை விட, தன் சாப்பாட்டை அடுத்தவர் சாப்பிடுவதை விரும்ப வேண்டும்.

ஒருவர் செஃப் ஆக வேண்டும் என்றால், சாப்பிடுவதை விரும்புவதை விட, தன் சாப்பாட்டை அடுத்தவர் சாப்பிடுவதை விரும்ப வேண்டும். அப்படி அடுத்தவர் சாப்பிடுவதை ரசிப்பவர் எந்த மாதிரியான நிர்வாகத்தில் வேண்டுமானாலும் வேலை செய்யலாம். சிறந்த செஃப் ஆக உருவாக முடியும்.

கேட்டரிங் என்றால் நமக்கு செஃப் நினைவுக்கு வருவதால் அந்த துறையின் வாய்ப்புகள் பற்றி இத்தொடரில் பார்த்தோம், ஆனால் இன்னும் பலவகையான துறைகள் இருக்கிறது என கடந்த இதழில் பார்த்தோம், அந்த துறைகளின் வேலை வாய்ப்புகளைப் பற்றி இனி வரும் இதழ்களில் பார்ப்போம்.

 

தொடரும் …

— கபிலன்.

 

ஹோட்டல் துறை என்றொரு உலகம் தொடா்-  8 ஜ படிக்க

படிப்பு தந்த படிப்பினைகள் – ஆசிரியரும் வழிகாட்டுதலும். ஹோட்டல் துறை என்றொரு உலகம் பகுதி – 8

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.