‘ரெட்ரோ’ வின் “கண்ணாடி பூவே”  ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சூர்யா நடிப்பில்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்,  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும்   ‘ரெட்ரோ’ படத்திலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அழகான மெலோடி பாடலாக “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.  பாடலாசிரியர் விவேக்கின் அற்புதமான வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார்.பாடல் வெளியானவுடனே, இசை ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சூா்யாவின் ரெட்ரோ
சூா்யாவின் ரெட்ரோ

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

சூர்யா ,  பூஜா ஹெக்டே  ஜோடியுடன்   ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் ‘ரெட்ரோ’ வில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை: சந்தோஷ் நாராயணன்,  படத்தொகுப்பு:  ஷபிக் முஹம்மத் அலி.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆக்சன் கலந்த ரொமாண்டிக்  என்டர்டெய்னராக தயாராகியுள்ள இப் படத்தை சூர்யா — ஜோதிகாவின் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்திருக்கிறது.. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

‘ரெட்ரோ’  படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை  வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

—  மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.