இலங்கை கடற்படை தாக்குதலை வேடிக்கை பார்க்கும்  பாஜக அரசு – எம்.பி கனிமொழி கண்டனம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்கும்  பாஜக அரசை கண்டித்து திமுகவினர் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு கொடியை கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்; கனிமொழி எம்.பி பங்கேற்பு;

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மாநிலத்தின் கொள்கையை மதித்து நடக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கடமையாக இருந்தாலும் மத்திய அரசு விரோத போக்கை கடைபிடிக்கிறது.

Sri Kumaran Mini HAll Trichy

கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக கடலோர பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக  குற்றச்சாட்டு முன்வைத்து தாக்குதல் நடத்துவது, துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்வது, உடைமைகளை சேதப்படுத்துவது  உள்ளிட்டவை தொடர்கதையாக நடைபெற்று வருகின்றது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த நிலையில் மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பாஜக அரசை கண்டித்து சட்டையில் பேட்ஜ் அணிந்தும்,  கருப்பு கொடியை கையில் ஏந்தியும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில்  ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Flats in Trichy for Sale

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசுக்கு எதிராக திமுகவினர் கண்டன கோசங்களை எழுப்பினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள், மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு மாநிலத்தின் உரிமையை மதித்து நடக்க வேண்டியது ஒன்றிய அரசினுடைய கடமை பொதுப் பட்டியலுக்கும்  மாநில பட்டியலுக்கும் ஒன்றிய அரசின் பட்டியலுக்கும் இருக்கக்கூடிய வித்தியாசத்தை அமைச்சர் உணர்ந்து பேச வேண்டும்.  நாம் செலுத்தக்கூடிய வரிப்பணத்தில் இருந்து உரிமையை தான் நாம் மாநில அரசின் நிதியாக கேட்கிறோம். அதனை தடுத்து நிறுத்த எந்த அரசுக்கும் உரிமை கிடையாது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மும்மொழி கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்கள் ரத்தம் சிந்தி  பெற்ற உரிமை என்ன மொழியில் கல்வி பயில வேண்டும் என்பது தமிழர்கள், தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்வார்கள் என மும்மொழி கொள்கை குறித்து மத்திய அமைச்சர் கேள்விக்கு பதில் தெரிவித்த கனிமொழி அதன் பின்பு  பத்திரிகை சுதந்திரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு

ஒன்றியத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகு ஒன்று பத்திரிகைகள் அவர்களது கைகளில் இருக்க வேண்டும். எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய பத்திரிகையாளர்களாக இருந்தால் எதிர் கருத்துக்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதுதான் பாஜகவின் கருத்து. கருத்து சுதந்திரம்  என்பது பாஜக ஆட்சி காலத்தில் முற்றிலுமாக பறிக்கப்படும் சுதந்திரமாக கருதப்படுகிறது என தெரிவித்தார் .

 

—  செய்தி பாலாஜி, படங்கள் : வினோத்குமார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.