செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முனைவர் D. இருதய ஆரோக்கியசாமி அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி

செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பும் காலநிலை மாற்றமும் என்கின்ற தலைப்பில்  முனைவர் D. இருதய ஆரோக்கியசாமி அறக்கட்டளையின் சொற்பொழிவு நிகழ்ச்சி மணிகண்டம்  மேல பாகனூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குனர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச  அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தனது தலைமை உரையில் நாளை சுற்றுச்சூழலை பாதுகாப்பது இன்றைய மாணவர்கள் கையில் தான் உள்ளது மாணவர்கள் அனைவரும் சுய ஒழுக்கத்துடனும் ஒவ்வொருவரும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது நமது தலையாய கடமையாகும் எனக் கூறினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் இந்திய கத்தோலிக்க நலவாழ்வு சங்கம் மற்றும் தமிழ்நாடு கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்தின்  மாநில திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் அவர்கள் தனது சிறப்புரையில் இப்பூமி எவ்வாறு மாசுபாடு அடைகிறது. நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் நாம்  ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என செயல்முறை விளக்கத்தின் மூலம் எடுத்துக் கூறினார்கள். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் உண்ணும் உணவுகளிலும்  கவனம் செலுத்த வேண்டும். பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப நாம் எந்தெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் அவர்கள் தனது திட்ட விளக்க உரையில் முனைவர் D  இருதய ஆரோக்கியசாமி அறக்கட்டளை நிதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்பர்டு துறையினரால்  கிராமப்புறங்களில் நடத்தப்படுகிறது.

இவ்வாண்டு அதற்கு  உறுதுணையாக இருந்த  மேலப்பாகனூர் தொடக்கப்பள்ளி  தலைமை ஆசிரியருக்கும் பிற ஆசிரியர்களுக்கம் மாணவர்கள்  ஊர் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். மேலும்  இயற்கையை பேணி பாதுகாத்து அதில் இருந்து கிடைக்கும் மூலிகையின் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எடுத்துக்காட்டுகள் கூறினார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இளநிலை ஒருங்கிணைப்பாளர் யசோதை அவர்கள் தனது தொடக்க உரையில் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது முதலில் நம் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். நம்மை மட்டும் அல்ல நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தை மாணவர்கள் சிறு வயதிலிருந்தே  பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை; கூறினார்கள்.

பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் பல ஆண்டுகளாக கிராமங்களில் மக்களுக்காக சேவை புரிந்து வரும் செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு துறையின் கல்லூரி மாணவர்களையும் வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

கடந்த ஒரு வார காலமாக  சுற்றுச்சூழல் வரையறை முழக்கங்கள்  எழுதுதல்  கவிதை போட்டி ஓவியப்போட்டி கலை மற்றும் கைவினைப் பொருட்கள் போட்டிகள் நடைபெற்றன அதில் பங்கேற்றோருக்கு இந்நிகழ்ச்சியில் மாணவர்களை பாராட்டி பரிசுகளும் வழங்கப்பட்டன.

நமது  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் செல்வன் சந்தோஷ்ராஜ் வரவேற்றார். இந்நிகழ்ச்சியினை செல்வன் தனுஷ் தொகுத்து வழங்கினார். இறுதியாக செல்வன் அஜய் ஜோஸ்வா நன்றியுரை ஆற்றினார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் திருமதி வளர்மதி, திரு ராஜேந்திரன்  பள்ளி மேலாண்மை குழு தலைவர் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் கிராமப்புற மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சினை செயின்ட் ஜோசப் கல்லூரியின் கணினி அறிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 

—  அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.