‘ஸ்வீட் ஹார்ட்’ டீமிற்கு வாழ்த்து சொன்ன யுவன் சங்கர் ராஜா
ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் கடந்த 14-ஆம் தேதி வெளியானது ‘ ஸ்வீட் ஹார்ட்’. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ‘படம் நன்றாக இருக்கிறது’ என்ற பாசிட்டிவான விசயத்தை மவுத் ஆஃப் டாக்காக பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த தருணத்தில் இசைப் பணிக்காக வெளிநாட்டில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா படக் குழுவினருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள செய்து, வெற்றி பெற வைத்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தைப் பார்த்து ரசித்தவர்களும் நல்ல விதமான விமர்சனங்களை சமூக வலைதள பங்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் ஊக்கமடைந்துள்ளனர்.
— மதுரை மாறன்.