அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

”ஏ.எல்.விஜய் எனக்கு தாயுமானவன்” – டைரக்டர் பாலா உருக்கம்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்‌ஷன்ஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்து ஏ.எல்.விஜய் டைரக்ட் பண்ணி, வருகிற 06-ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. மலையாள நடிகரான மதும்கேஷ், மராத்தி நடிகையான ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : அரவிந்த் கிருஷ்ணா, இசை :ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டிங் : ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் : சரவணன் வசந்த், காஸ்ட்யூம் டிசைன்: வினோத், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீடு சென்னையில் 28-ஆம் தேதி இரவு நடந்தது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி ’காதல் ரீசெட் ரிப்பீட்’-டில் ஸ்பெஷல் ட்ரீட் வைத்துள்ளார். டைரக்டர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

காதல் ரீசெட் ரிப்பீட்நடிகர்கள் மதும்கேஷும் அர்ஜுன் அசோகனும் தமிழில் தங்களை அறிமுகப்படுத்தியதற்காக டைரக்டர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர்.

எம்.எஸ்.பாஸ்கர், “தம்பி விஜய்யின் படங்களில் எப்போதுமே நல்ல கேரக்டர் தான் கொடுப்பார். அதைப் போலத்தான் இந்தப் படத்திலும் கொடுத்துள்ளார். அதைவிட சிறப்பும் மகிழ்ச்சியும் என்னன்னா, படத்திற்காக பேசிய சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து நான் வீடு கட்டுவதற்கும் உதவினார்”.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

விஜி சந்திரசேகர், “இந்தப் படத்தின் கதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, தெரிஞ்சக்கவும் விரும்பல. ஏன்னா டைரக்டர் விஜய் படம் இது, கண்டிப்பா நல்ல கேரக்டராத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை”.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “நல்ல கவித்துமான வரிகளைப் போட்டு பாடல்கள் எழுதும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்தது. டைரக்டர் விஜய்க்கும் இந்த மாதிரி எழுதுவது தான் பிடிக்கும். 25 ஆண்டுகளைக் கடந்து சினிமாவில் நிலைத்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துக்கள்’.

2026 June 11 - 17 Angusam Book

ஏ.எல்.விஜய்
ஏ.எல்.விஜய்

ஹீரோயின் ஜியா சங்கர், “எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து பேசுவதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். உணர்வுகளை வெளிப்படுத்த மொழி ஒரு தடையாக இருக்காது என நம்புகிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. டைரக்டர் விஜய் என்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறேன்னு நினைக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் எனது பயணத்தை தமிழில் இருந்து தொடங்கியிருக்கிறேன். வாழ்த்துங்கள், வளர்கிறேன்”.

“கதைக்களம் வலுவாக அமைந்துவிட்டால் எந்த ஸ்டார் வேல்யூவும் தேவையில்லை, பிரம்மாண்டம் தேவையில்லை” என்றார் ஹாரிஸ் ஜெயராஜ்.

டைரக்டர் பாலா, “ஏ.எல்.விஜய் என்னைவிட வயதில் சின்னவன் தான் என்றாலும் அவன் தான் எனக்கு குரு. எப்படி உழைக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தவன். ஒரே வார்த்தையில் சொல்லணும்னா எனக்கு தாயுமானவன்”.

ஏ.எல்.விஜய், “அண்ணன் பாலா என்னைப் பற்றிச் சொன்னது மிகப்பெரிய வார்த்தை. உங்களின் படங்கள் தான் என்னைப் போன்றவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கு. உங்களுடன் தொடர்பில் இருப்பதையே பாக்கியமாகக் கருதுகிறேன்”.

—    ஆண்டவர்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.