இவர்களுக்கெல்லாம் UPI சேவை செயல்படாது..!
செயல்படாத செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடிகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் ரத்து செய்ய உள்ளது.
இதன் காரணமாக, அத்தகைய செயல்படாத செல்போன் எண்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள், கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற ஆன்லைன் பண பரிமாற்ற செயலிகளை பயன்படுத்த முடியாது.
செல்போன் எண்களை மாற்றியும், அதை தங்களின் வங்கிக்கு தெரிவிக்காமல் இருப்பவர்கள், வேறு நபர்களுக்கு மாற்றப்பட்ட செய்தி போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தப்படாத செயல்படாத செல்போன் எண்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோரின் யுபிஐ ஐடிகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆகையால், அந்த அபாயத்தை தவிர்க்கும் வகையில் அவர்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
யுபிஐ ஐடி உடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் செயல்படாத நிலையில் இருந்தால், வேறு புதிய எண் வாங்க முயற்சிக்க வேண்டும். செய்லபடாத செல்போன் எண்களுடன் இணைந்த யுபிஐ ஐடிகள் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதல் இந்த நடிவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.