பயிற்சி பெண் மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் ! மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
சிவகங்கை மருத்துவக் கல்லூரி விடுதியில் பயிற்சி பெண் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூறுகையில், “இந்தியாவில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. கொல்கத்தா, கிண்டியை தொடர்ந்து தற்போது சிவகங்கையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
மருத்துவ வளாகத்திலேயே மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவத்தை மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை போலவே அனைத்து மருத்துவமனையிலும் தலைமை மருத்துவர் அல்லது பெண் மருத்துவர் தலைமையில் பயிற்சி மருத்துவர்கள் பாதுகாக்க குழு அமைக்க வேண்டும். மேலும், மின்விளக்குகள் மற்றும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தி மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு ரெசிடென்ட் டாக்டர் அசோசியேஷன் உள்ளிட்ட அனைத்து சங்கங்கள் சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
— ஷாகுல், படங்கள்:ஆனந்தன்.