அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எட்டையபுரம் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகைக்கு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும்  வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம். திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தேனி என தமிழகத்தின் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடிவரை விற்பனை நடைபெறும்.

ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில்ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

எட்டையாபுரம் ஆட்டுச் சந்தை
எட்டையாபுரம் ஆட்டுச் சந்தை

இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை வரும் திங்கள் கிழமை (31.03.2025) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சந்தைக்கு சுமார் 8 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பால்குடி மாறா குட்டி ஆடுரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது.

எட்டையாபுரம் ஆட்டுச் சந்தைவளர்ந்த ஆடுகள் கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. அதாவது பெரிய ஆடுகள் கிலோவிற்கு ஏற்ப ரூ.9000முதல் 28000 வரை விற்பனையாது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் சுமாராகத்தான் இருப்பதாகவும், ஆடுகள் வாங்குபவர்கள் விலையை குறைத்து கேட்பதாகவும், 12 ஆயிரம் ரூபாய் ஆடுகள் பத்தாயிர ரூபாய்க்கு கேட்டு வாங்கி செல்வதாகவும், ஐந்து கோடி ரூபாய் வியாபாரம் நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

 

—  மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.