அங்குசம் சேனலில் இணைய

கவிஞர் தமிழ் ஒளி நினைவேந்தல் கருத்தரங்கம் – பேராசிரியர் இரா.குறிஞ்சிவேந்தன் பங்கேற்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பன்முகப் படைப்பாளி கவிஞர் தமிழ் ஒளி அவர்களின் 61ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு மொழிப்புலத்தில் அமைந்துள்ள கவிஞர் தமிழ் ஒளி சிலைக்கு துணைவேந்தர்(பொ) குழு உறுப்பினர் முனைவர் பாரத ஜோதி பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கவிஞர் தமிழ் ஒளி நினைவேந்தல்மேலும், தமிழ் ஒளியின் பன்முகப்படைப்புகள் குறித்து சிறப்புக்கருத்தரங்கம் மொழிப்புல அவையத்தில் நடைபெற்றது. கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீமான் இளையராஜா அனைவரையும் வரவேற்றார். கலைப்புல முதன்மையர் பேராசிரியர் பெ. இளையாப்பிள்ளை மொழிப்புல முதன்மையர் பேராசிரியர் ச. கவிதா வாழ்த்துரை வழங்கினார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கவிஞர் தமிழ் ஒளியின் பன்முகப்படைப்புகள் குறித்து அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். நிறைவாக மொழியியல் துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் இரமேஷ்குமார் நன்றி கூறினார். முதுகலைத் தமிழ் மாணவி கிருபா நிகழ்ச்சிகலைத் தொகுத்து வழங்கினார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கவிஞர் தமிழ் ஒளி நினைவேந்தல்நிகழ்வில், பேராசிரியர்கள் இரா. காமராசு, ஜெ. தேவி, தியாகராஜன், இரா.சு. முருகன் சங்கீதா, விஜயராஜேஸ்வரி, அறிவானந்தன், ஜாக்லின், மாண்டேலா, இரவிச்சந்திரன், ராகேஷ் சர்மா உள்ளிட்ட பேராசிரியர்களும் நூற்றுக்கணக்கில் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.