ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்காதவருக்கும் ஹோட்டல் வேலை! ஹோட்டல் துறை என்றொரு உலகம்-13
ஹோட்டல் துறையில் வேலை செய்ய ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் படிப்பு படித்தவர்களுக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு இருக்கும் என நினைப்போம். ஹோட்டல் துறையில் வெவ்வேறு படிப்புகள் சார்ந்த பல வேலைகள் உள்ளன.
பொதுவாக இன்ஜினியரிங் மற்றும் கம்யூட்டர் படிப்புகளுக்கு இன்று பெரிய வரவேற்பு இருக்கிறது. இரண்டு துறைகளாக ஹோட்டல்களில் இவை செயல்படுகின்றன. ஒன்று ஹோட்டலில் ப்ளம்பிங், கார்பென்டரிங், பெயிண்டிங், எலக்ட்ரிக்கல், ஏசி மெக்கானிக் ஆகிய அனைத்து பணிகளும் தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் கொண்டதே ஹோட்டலின் கட்டிடம் ஆகும். அதனால் ஹோட்டலில் இன்ஜினியரிங் என்ற ஒரு துறை தனியாக செயல்படும். 100 அறைகள் கொண்ட ஒரு ஹோட்டலில் சராசரியாக 15 இன்ஜினியரிங் பணியாளர்கள் இருப்பர். இந்த துறையின் தலைமைப் பொறுப்பாளராக இருப்பவர் Chief Engineer என அழைக்கப்படுவார். எப்படி சமையல் துறையில் Chef என அழைக்கிறோமோ, அதேபோல் Engineering -இல் Chief என அழைப்பது மரியாதைக்குரியதாகும்.
B.E. படித்தவர்கள்தான் இந்த வேலைகளுக்கு வர வேண்டும் என்றில்லை, ஹோட்டலில் அதிகமாக Skill எனப்படும் திறன் சார்ந்த வேலைகள் இருப்பதால் Diploma மற்றும் ITI படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது.

குடிநீர் வழங்குவது, மின்சாரம் வழங்குவது, ஜெனரேட்டர் செயல்பாடுகள், சமையல் எரிவாயு செயல்பாடுகள், கிட்ச்சன் டிசைனிங், Duct, Chimney போன்ற கிட்சன் செயல்பாடுகள், ஏசி, ப்ரிட்ஜ், கோல்ட்ரூம், கழிவு நீர் சுத்திகரிப்பு, போன்ற பல்வேறு பணிகளின் மூலம் ஹோட்டல் நடத்த உறுதுணையாக இருப்பது Engineering Department ஆகும். நான் Engineering துறையைப் பற்றி பயிற்சியில் அடிக்கடி சொல்வது என்னவென்றால், ஒரு ஹோட்டலில் Engineering துறை இருப்பது பொதுவாக யாருக்கும் தெரியாது. அப்படி தெரியவில்லை என்றால், Engineering சரியான முறையில் செயல்படுகிறது என்று அர்த்தம், எப்பொழுது பிரச்சனை ஏற்படுகிறது அப்போதுதான் Engineering துறையின் தேவை நமக்கு தெரியவரும் என்பதுதான். ஆம், ஒரு ஹோட்டலில்
நாம் பார்ப்பது, உணர்வது என பல இடங்களில் Engineeringமறைந்திருக்கிறது. இந்த துறையில் வேலைக்கு சேர்ந்தால், technician ஆக வேலைக்கு சேர்ந்து சூப்பர்வைசர், துணை இன்ஜினியர், Chief Engineer என பதவிகளுக்கு உயரலாம்.
ஹோட்டலில் IT Department எனப்படும் Computer துறையிலும், Engineering போலவே, பல சுவாரசியங்கள் இருக்கின்றன. இன்று கம்ப்யூட்டர் இல்லாத அலுவலகங்களே இல்லை என சொல்லலாம். அதைப்போலத்தான் ஹோட்டலும், வரவேற்பு முதல், கொள்முதல் வரை அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டரின் தேவையும் செயல்பாடுகளும் இங்கு அதிகம். ஹோட்டல் சாஃப்ட்வேர்கள் பல உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் பல தேவைகள் உள்ளன. அவற்றை செயல்படுத்துவது IT Department ஆகும்.
ஹோட்டல்களில் வழங்கப்படும் இணைய வசதியை நடைமுறைப் படுத்துவது IT Department ஆகும். இன்றைய காலகட்டங்களில் People can skip breakfast but cannot survive without internet எனவும் People are ready to travel without wife but not without wifi எனவும் நான் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு internet பயன்பாடும் தேவையும் அதிகரித்துள்ளது.
ஹோட்டலில் ஒருவர் தங்குவதற்கு வரும்போழுதே internet வசதி பற்றியும் அதற்கான User ID, Password போன்ற தகவல்களும் தரப்படுவது நடைமுறையில் உள்ளது. இவற்றை சரியான முறையில் நடைமுறைப் படுத்துவது ஐ.டி டிபார்ட்மெண்ட் ஆகும். கம்ப்யூட்டர்களின் தரவுகளைப் பராமரிப்பது, ஙிணீநீளீ uஜீ எனப்படும் தரவு பாதுகாப்பு போன்ற அத்தியாவசியப் பணிகளை ஐ.டி டிபார்ட்மெண்ட் செய்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி, போன்ற படிப்பு களைப் படித்தவர்களுக்கு Hotel Industry IT Department வேலை வாய்ப்புகள் உள்ளது. IT Assistant, Supervisor, Executive, Assistant Manager, Manager போன்ற பதவிகளில் முன்னேறலாம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு ஹோட்டலின் அளவைப் பொருத்து இந்த துறைக்குத் தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கை மாறுபடும். பொதுவாக 2 அல்லது 3 நபர்கள் கொண்ட துறையாகவே இந்த துறை இருக்கும். இணைய வசதி, சாப்ட்வேர் போன்ற பல பணிகளை இந்த துறை வெளி ஆட்கள் மூலமாக செய்கிறது. அப்படி வெளி ஆட்களுடன் பேசி அவர்களை வேலை வாங்கும் பணி இந்தத் துறைக்கு உள்ளது.
இன்ஜினியரிங், ஐ.டி.போன்று இன்னும் அரியப்படாத துறைகளும், வேலைவாய்ப்பு இருக்கும் துறைகளும் ஹோட்டலில் உள்ளது. அவற்றைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள், வேலை வாய்ப்பு, கல்வித் தகுதி வளர்ச்சி போன்றவற்றை அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம் .
தொடரும்…
கபிலன்