Arts College மாணவர்களுக்கும் ஹோட்டல் வேலை ! ஹோட்டல் துறைஎன்றொரு உலகம் பகுதி –14

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஹோட்டல் துறையில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்புள்ளது என்பது பற்றி சென்ற தொடரில் பார்த்தோம். கடந்த தொடரில், ஐ.டி, மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வாய்ப்புகள் குறித்து பேசியிருந்தோம். இந்த இதழில், பி. காம். மற்றும் எம். காம். படித்தவர்களுக்கான வாய்ப்புகள் குறித்து பேசுவோம்.

இந்த படிப்பு எந்த ஒரு வியாபார நிறுவனத்துக்கும் பொதுவான படிப்பு ஆகும். ஹோட்டல்களில் இரண்டு முக்கியமான துறைகளில் பி.காம். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. அவை Purchase & Accounts ஆகிய இரண்டு துறைகளாகும்.

Sri Kumaran Mini HAll Trichy

ஹோட்டல் துறைஎன்றொரு உலகம் பர்ச்சேஸ் துறை என்பது தமிழில் கொள்முதல் எனப்படும். ஒரு ஹோட்டலுக்கு தேவையான மிகப்பெரிய ஜெனரேட்டர், பல்வேறு விதமான இயந்திரங்கள், ஏசி, கம்ப்யூட்டர், சோஃபா, சேர்கள், என பெரிய பொருட்கள் முதல், அன்றாடம் சமையலுக்குத் தேவையான மளிகை, இறைச்சி, காய்கறிகள், பால் என அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுக்கும் துறை இந்த துறை ஆகும். ஒரு பர்சேஸ் டிபார்ட்மெண்ட் திறமையாக இருக்கும் பட்சத்தில், ஹோட்டல் சிறப்பாக செயல்பட முடியும். சுருக்கமாக சொன்னால், குண்டூசி முதல் ஜெனரேட்டர் வரை, பென்சில், பேப்பர் முதல் அரிசி பருப்பு வரை, மெத்தை முதல் சோப்புவரை என அனைத்தையும் வாங்கிக் கொடுக்கும் துறை இத்துறை ஆகும்.

கொள்முதல் துறையில் பணிபுரியும் பொழுது, பல்வேறு பொருட்களின் தன்மையும் தேவையும், தகவலும் தெரிந்து கொள்ள முடியும். நமது உலகப்பார்வை விசாலமாகிறது. இந்த துறையில் வேலை செய்யும் பொழுது, உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் இன்னும் சில சட்டங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

எந்த படிப்பு படித்தாலும் இந்த துறையில் வேலை கிடைக்கும். ஆனால், பி.காம். படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏனெனில், பொருட்களின் வரவு, பதிவு, ரசீது போன்றவற்றை சரியாக கணக்கில் வைக்க பி. காம். படித்தவர்களுக்கு எளிமையாக இருக்கும்.

ஹோட்டல் துறைஎன்றொரு உலகம் Purchase Assistant, Purchase Supervisor, Purchase Executive, Purchase Manager, Corporate Purchase என பல்வேறு பதவிகளுக்கு உயர முடியும். பெரிய நிறுவனங்களில் ஆண்டு முழுவதும் ஒரே விலையில் Tender முறையில் பொருட்களை வாங்குவார்கள். அந்த முறையை சிறப்பாக கையாளும் முறையினை பர்ச்சேஸ் துறைதான் செய்ய வேண்டும். சரியாகச் சொன்னால், அனைத்து துறைக்கும் தேவையான பொருட்களை வாங்கித் தரும் துறையான பர்ச்சேஸ் துறைக்கு வேலைக்கு சேர கேட்டரிங் படித்திருக்க வேண்டும் என கட்டாயமில்லை. எந்த பட்டப்படிப்பு படித்தாலும் போதும், கேட்டரிங், அல்லது பி.காம். படித்த விருப்பமுள்ளவர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மற்றுமொரு மிக முக்கியமான துறை அக்கவுண்ட்ஸ் அல்லது ஃபினான்ஸ் எனப்படும் துறை. இந்தத் துறையில் பணிபுரிய, அக்கவுண்ட்ஸ் படித்திருப்பது அவசியம். பி.காம், எம்.காம், எம்.பி.ஏ., ஃபினான்ஸ் போன்ற படிப்பு படித்தவர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பு உள்ளது.

Flats in Trichy for Sale

Accounts துறையில் மூன்று முக்கிய பிரிவுகள் ஹோட்டல்களில் செயல்படுகின்றன. 1. Receivables, 2. Payables, 3. Cost Control இந்த பிரிவுகளின் செயல்பாடுகள் ஹோட்டலுக்கு மிகவும் முக்கியமாகும்.

ரிசீவபல்ஸ் எனப்படும் பிரிவின் மூலம், அறைகள், சாப்பாடு போன்ற   அனைத்து வருமானமும் வரவு வைக்கப்படுவதுடன், தொடர் வாடிக்கையாளருக்கான கடன் கணக்குகள் ஆகியவையும் பராமரித்து,பாக்கிகளை தக்க நேரத்தில் அவர்களிடம் இருந்து பெறும் பணிகளும் செய்யப்படுகின்றன.

ஹோட்டல் துறைஎன்றொரு உலகம் பேயபில்ஸ் எனப்படும் பிரிவின் மூலம்தான், பர்ச்சேஸ் துறையில் வாங்கும் பொருட்களுக்கான செலவுகள், பணியாளர்களுக்கான சம்பளம் பொன்றவை கொடுக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், அனைத்து செலவுகளும் இந்த பிரிவின் மூலம்தான் செயல்படும்.

காஸ்ட்கன்ட்ரோல் பிரிவின் மூலம் உணவுக்கான செலவுகளை அன்றாடம் கணக்கிட்டு சரியான அறிக்கைகள் தயாரிப்பதன் மூலம் இலாபத்திற்கான வழிகளை சரியாக வகுக்க முடியும்.

இந்த அனைத்து பிரிவுகளும் அக்கவுண்ட்ஸ் அல்லது ஃபினான்ஸ் எனப்படும் துறையில் இயங்குகின்றன. இவற்றில் Accounts Assistant, Accounts Supervisor, Cost Controller, Accounts Executive, Accounts Manager போன்ற பதவிகள் உள்ளன.

B.Com, M.Com, B.B.A, M.B.A Finance, Any Degree படித்தவர்கள், ஸ்டார்ஹோட்டல்களுக்கு சென்று Purchase அல்லது Accounts துறைகளில் வேலை vacancy உள்ளதா எனக்கேட்பதன் மூலம் அவர்களுக்கு ஹோட்டல் பற்றிய புரிதல் உள்ளது என்பதை உணர்த்த முடியும்.

இவ்வாறு பல துறைகள் ஹோட்டலில் உள்ளன. இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய துறைகளும், வேலைவாய்ப்பு இருக்கும் துறைகளும் ஹோட்டலில் உள்ளது. அவற்றைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள், வேலை வாய்ப்பு, கல்வித் தகுதி வளர்ச்சி போன்றவற்றை அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம்.

தொடரும்

கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.