அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் வருகின்ற 25.04.2025 முதல் 15.05.2025 முடிய 21 நாட்களுக்கு திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கத்தில் காலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, வூசூ மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு கட்டணமில்லா பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

கோடை கால பயிற்சி வகுப்புகள்
கோடை கால பயிற்சி வகுப்புகள்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எனவே,மேற்கண்ட பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தினமும் ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுபவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யாவரும் கேளீர்

மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும் 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப.அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.