திருச்சி காவேரி மருத்துவமனை ரோட்டபிளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டியில் புதிய மைல்கள் சாதனை….
டெல்டா மக்களின் பிரத்தயேக இதய சிகிச்சை மையமான காவேரி மருத்துவமனை ஹார்ட் சிட்டி தற்போது ரோட்டபிளேஷன் ( ROTABLATION ANGIOPLASTY ) எனப்படும் நவீன சிகிச்சை முறையில் சிறப்பாக செய்து வருகிறது .
உறுதியான நரம்பு தடுப்புகளை சரி செய்யும் இந்த நவீன சிகிச்சை முறை சீரான முறையில் செய்து வரும் ஒரே மருத்துவமனையாக திகழ்கிறது. இந்த சிகிச்சையை மருத்துவர் அரவிந்தகுமார் தலைமையில் 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரைக்கும் 40க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இது டெல்டா பகுதியில் சிகிச்சை செய்வது காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையின் சாதனையாக கருதப்படுகிறது…
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விற்பனை மேலாண்மை தலைமை பொது மேலாளர் மாதவன், துணை மருத்துவ மேலாண்மை அதிகாரி டாக்டர் கோகுலகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் செந்தில் குமார் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் டாக்டர் அரவிந்த குமார் கூறும் பொழுது வழக்கமான ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் செய்ய முடியாத சிக்கலான நோயாளிகளுக்கு இந்த புரோட்டாபிளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி மிகவும் சிறந்தது.
நம் மருத்துவமனையின் நவீன வசதிகளும் நிபுணத்துவமும் இந்த சாதனையை செய்ய வெற்றிகரமாக உதவுகிறது என்று தெரிவித்தார். மருத்துவமனையில் தலைமை இதய, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் கூறும் பொழுது இப்போதெல்லாம் மெட்ரோ நகரங்களுக்கு இதய சிகிச்சைக்காக செல்ல வேண்டியது இல்லை காவேரி ஹார்ட் சிட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 24 மணி நேரமும் விரைவான மற்றும் சிறந்த பிரத்யேக சிகிச்சை வழங்கும் திறன் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் தற்போது நோயாளிகள் வசதிகளுக்காக மாலை நேரம் மருத்துவ சிகிச்சை பிரிவு மாலை ஐந்து முப்பது முதல் ஏழு முப்பது வரை செயல்படுகிறது என்றும் தெரிவித்தனர்…