அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தொட்டியம் – கொலை குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்த எஸ்.பி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நவதீப் வயது 17/25, த/பெ. குமார் (முத்துராஜா) என்பவர் தனது குடும்பத்துடன் எண். 3/253. தெற்குத்தெரு, கல்லுப்பட்டி, அலகரை போஸ்ட், தொட்டியம் என்ற முகவரியில் வசித்து வருவதாகவும்.

கடந்த 25.04.2025 ஆம் தேதி அன்று மாலை சுமார் 19.00 மணியளவில், நவதீப், அவரது சித்தப்பா மகன் ரோஹித் ஆகியோர் வீட்டிற்கு முன் பேசிக் கொண்டிருந்தாகவும், அப்போது, தொட்டியம் திருஈங்கோயிமலையைச் சேர்ந்த வேலு (எ) வேல்முருகன். பழையூரைச் சேர்ந்த இன்பரசு மற்றும் நவீன் ஆகியோர் இரு சக்கர வாகனகத்தில் (பல்சர்); குடிபோதையில் வந்து, குடிக்க தண்ணீர் கேட்டதகாவும், அப்போது அவர்கள் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும். மீண்டும் 1930 மணியளவில், மேலே கூறப்பட்ட வேல்முருகன், இன்பராசு மற்றும் நவீன் ஆகியோர் சத்யா, சரவணன், சசி மற்றும் கரண் ஆகிய நான்கு பேரை அழைத்து வந்து தகராறு செய்து ஆயுதங்களால் தாக்கியதில், 1.சுப்பிரமணியன், 60/25, த/பெ. ஆறுமுகம் (நவதீப்பின் மாமா). 2.குமார். 42/25, த/பெ. அண்ணாவி. மற்றும் 3.சந்துரு 20/25, த/பெ. குமார் (எ) போஷ், கல்லுப்பட்டி கிராமம் ஆகியோர்களுக்கு குத்து காயங்களும், வெட்டு காயங்களும் ஏற்பட்டு தொட்டியம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் அதில் சுப்பிரமணியன் இறந்துவிட்டதாகவும்,

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மேலும், மேல்சிகிச்சைக்காக குமார் நாமக்கல் அரசு மருத்தவமனையிலும், சந்துரு திருச்சி ரம்யா மருத்துவமனையிலும்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில், மேற்கூறிய எதிரிகள் சம்பவ இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் தப்பி சென்றனர்.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேற்படி சம்பவம் தொடர்பாக, நவதீப் கொடுத்த புகாரின் பேரில், தொட்டியம் , 138/25, u/s 192 (2), 191 (3), 296(b), 118(1), 109(1), 103(1) BNS வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் வேல்முருகன் மற்றும் ஆறு நபர்கள் மேல் வழக்கு பதியப்பட்டு எதிரிகள் A1.வேல் (எ) வேல்முருகன் 22/25, த/பெ. ரவிச்சந்திரன், A3 இன்பரசு, 19/25, த/பெ. சீனிவாசன், A4.நவீன், 19/25, த/பெ சரவணன், A5. சரவணன் 37/25, த/பெ பழனியாண்டி, A6. சசி (எ) சசிகுமார், 42/25, த/பெ. பழனியாண்டி A7.கரன் 22/25, த/பெ சீனிவாசன்,  ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள எதிரி A2.சத்யா 40/25, த/பெ பழனியாண்டி,என்பவரை விரைந்து கைது செய்ய, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எதிரியை தேடிவருகின்றனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எஸ்.பி. செல்வநாகரத்தினம்
எஸ்.பி. செல்வநாகரத்தினம்

மேற்படி வழக்கில் காயம்பட்ட குமார். 42/25, த/பெ. அண்ணாவி, (காயங்கள்-வலது பக்க இடுப்பு, வலது பக்க விலா எலும்பு, பின்தலை, முதுகு) நாமக்கல் அரசு மருத்தவமனையிலும், சந்துரு 20/25, த/பெ. குமார் (எ) போஷ், (காயங்கள் நடு முதுகு, வலது கை மணிக்கட்டு)திருச்சி ரம்யா மருத்துவமனையிலும், சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக மேற்படி கிராமத்தில் காவல் பாதுகாப்பு பணி ஏற்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேற்படி சம்பவம் குறித்து பொய்யான தகவல்களையோ. உறுதி செய்யப்படாத தகவல்களையோ யாரும் பரப்ப வேண்டாம் என திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.