ராமஜெயத்தை நேரில் பார்த்த சாட்சிகளை மிரட்டி மாற்றி சொல்ல சொன்னது யார் ?
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு மற்றும் மலேசியா ஆகிய பகுதிகளில் நடக்கும் கொலைகள் பாணி என்றும், குறிப்பாக மலேசியா ஸ்டைல் என்றும் சொல்லப்பட்டது. காரணம், கட்டுக் கம்பிக் குவியலில் இருந்து கம்பிகளை எடுத்து ராமஜெயத்தின் கை, கால்களைக் கட்டி, வேனின் ரெக்சின் ஸீட் மீது போர்த்தப்பட்டு இருக்கும் துணியைக் கிழித்து வாயில் வைத்து அடைத்து இருந்தார்கள். தலையின் பின்பக்கம் ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டு இருந்தது.
இவை எல்லாம் வெளிநாட்டு பாணி, இவ்வளவு கொடூரமாக ராமஜெயத்தை கொலை செய்யும் அளவுக்கு எதிரிகள் யாரும் இங்கு இல்லை. காரணம் ராமஜெயம் உயிரோடு இருந்தவரை அவரை ஸ்கெட்ச் போட்ட பலரை தன் வயப்படுத்துவதில் வல்லவர் அவர் என்கிறார்கள் நம்முடைய விசாரணையில் தெரிந்தது.
இதனால், திருச்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் ராமஜெயத்துடன் நல்ல லிங்க்கில் இருந்தார்களாம். எனவே தான், தனிப்படைப் போலீஸார், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட 2012 மார்ச் 29ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு சென்றவர்கள், வந்தவர்கள் என அனைவரின் பெயர் பட்டியலையும் கையோடு வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினார்கள்.
ஆரம்பத்தில் நடத்தப்பட்ட திருச்சி மாநகர போலீஸாரின் விசாரணையும் சரி, சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணையும் சரி, ராமஜெயத்தின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சுற்றி சுற்றியே வந்தது. இதில் கடுப்பான கே.என். நேரு குடும்பத்தினர், ‘திருச்சியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்ததில் இருந்து இப்போது வரை இங்கேயே இருக்கிறார்கள். அதனால், இந்தக் கொலை வழக்கு நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை’ என்று சொல்லி வந்தார்.
குறிப்பாக திருச்சி மாநகர காவல்துறை கமிஷனராக இருந்த சைலேஷ்குமார் யாதவ், மூன்றாண்டுகளுக்கும் மேலாக அதே பொறுப்பில் நீடித்தார். இந்த அதிகாரிகள் அதே இடத்தில் தொடர்ந்து பணி புரிவதற்கும், இந்தக் கொலை வழக்கு துப்பறியாமல் கிடப்பதற்கும் தொடர்பிருப்பதாக ராமஜெயத்தின் குடும்பத்தினர் சந்தேகப்பட்டனர். அப்போது இடைத்தேர்தலை காரணம் காட்டி சைலேஷ் குமார் யாதவை மதுரைக்கு மாற்றினார்கள்.
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட போது இருந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த அதிகாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயஸ்ரீமுரளிதரன், போலிஸ் கமிஷர் சைலேஸ்குமார் யாதவ், டிசி ராமையா, ஏடிஎஸ்.பி. ஜெயசந்திரன் ( தற்போது திவாகரன் சம்மந்தி ) தலைமையில் ஏசி சீனிவாசன், இன்ஸ் கோடிலிங்கம், ஸ்ரீரங்கம் இன்ஸ் செந்தில், தில்லைநகர் இன்ஸ் சேகர், நுண்ணறிவு பிரிவு ஏசி கந்தசாமி, ஆகியோர் அப்போது பொறுப்பில் இருந்தார்கள்.
ராமஜெயம் காலையில் வாக்கிங் சென்றது 10வது கிராஸ் வீட்டில் அன்றைக்கு தான் முதல்முறையாக வாக்கிங் சென்றிருக்கிறார். இதை அந்த வீட்டின் வாட்ச் மேன் காலையில் பார்த்தேன் என்றார். அதே போல பொடா கோர்ட்டின் நீதிபதி மணி என்பவர் தன் தனிப்பட்ட பணம் பிரச்சனை நம்மந்தமாக பார்பதற்கு அன்றைக்கு அதிகாலையில் வீட்டை விட்டு வெளியை வந்ததை அப்போதே வாக்குமூலம் பதிவு செய்தார்.
ஆனால் இந்த விசாரணை டீம் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் அவர் இரவே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று அவர்களை டார்ச்சர் செய்து கடைசியில் ராமஜெயத்தை நேரடியாக பார்த்தவர்கள் நாங்கள் பார்க்கவே இல்லை என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டார்கள். இப்படி போலிசாரின் விசாரணையை மாற்றியவர்கள் யார் ?
ஒரு கொலை செய்யப்பட்டவரின் நேரத்தை உறுதி செய்வது போஸ்மார்டம். அந்த அளவிற்கு நம்பக தன்மை கொண்டு. அப்போது திருச்சி அரசு மருத்துவனைக்கு போஸ்மார்டம் செய்வதில் தலைசிறந்தவர் என்று பெயர் எடுத்த கார்த்திகேயன் என்பவர் அரசு மருத்துவமனை டீனாக இருந்தார். அன்றைய தினம் காலையில் தான் இறந்திருக்கிறார் என்று அவர் முன்னிலையில் தான் உறுதி செய்தவர்கள். 6 மாதம் கழித்து காலையில் இறக்கவில்லை நள்ளிரவே இறந்திருக்க வாய்ப்பு இருக்கு என்று இறப்பு நேரத்தை மாற்றி சொன்னார். அதற்கு டெல்லி எம்ய்ஸ் மருத்துமனை மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இறப்பு நேரம் மாறியிருக்கிறது என்றார்கள். சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாறி பிறகு நள்ளிரவில் இறக்கவில்லை காலையில் தான் இறந்தார் என்பதை கண்டறிந்தனர்.
அப்படி என்றால் அப்போது இறப்பு நேரத்தை உறுதியாக செய்யாமல், ராமஜெயம் உடலை போஸ்மார்டம் செய்யும் போது ஏன் வீடியோ எடுக்கவில்லை என்கிற கேள்வி மில்லியன் டாலராக இருக்கிறது. கொலை நடந்த ஆரம்பகட்ட விசாரணையிலே பல இடங்கள் சொதப்பலாக இருந்தவை எவை, இவர்களுக்கு பின்னால் யார் இருந்து அலட்சியமா ? அல்லது அதிகார பலமா ?
அது யார் காரணம் என்பதை அடுத்து வரும் வாரங்களில் பார்ப்போம்.