மாநகராட்சியில் மேயருக்கும், துணை மேயருக்கும் இடையே வெடித்த பிரச்சினை….!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சேலம் மாநகராட்சியில் மேயருக்கும், துணை மேயருக்கும் இடையே வெடித்த பிரச்சினை….

சேலத்தில் அரசு விழாவில் மாநகராட்சி மேயர் புறக்கணிப்பதாக கூறி, பெண் துணை மேயர் விழா அரங்கில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு….

இந்த வார அங்குசம் வார இதழில்…

தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து முடிவுகள் வெளியானது. அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் உள்ள மாநகராட்சி நகராட்சி பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டி பரிசளிக்கும் நிகழ்ச்சி சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்றது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி , மாநகராட்சி ஆணையாளர் உட்பட கல்வித்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மேயர் உட்பட அரசு துறை அதிகாரிகள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், துணை மேயர் சாரதாதேவி பேச வாய்ப்பளிக்காமல் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த துணை மேயர் சாரதாதேவி மேயர் செயல் குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். பின்னர் ஆணையாளர் பேச அனுமதித்தும் மேயர் ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்து பேசவிடாமல் தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டும் வகையில் சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து யோசிக்காமல் சேலம் மாநகராட்சி அரசு விழாவிலிருந்து துணை மேயர் சாரதா தேவி விழாவை புறக்கணித்து வெளியேறியது, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த பெற்றோர்கள், பள்ளி மாணவ மாணவிகள் இடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.