அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முதல் முறையாக முன்மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை, மக்காத  குப்பைகளை பிரிப்பதற்கு மாவட்டத்திலேயே முன்மாதிரியான முயற்சியை எடுத்து பொதுமக்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று குப்பை தொட்டிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன்.

முன்மாதிரி திட்டம்
முன்மாதிரி திட்டம்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்  மேட்டமலை கிராமத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், முன்னிலையில், அவரது சொந்தச் செலவில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து கொடுப்பதற்கு ஏதுவாக ரூ.1 லட்சம் மதிப்பில் இரண்டு வண்ணங்களில் கிராம மக்களுக்கு குப்பை தொட்டி  வழங்கப்பட்டது,

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் குப்பைகளில் பொது வெளியில் எரிப்பதால் காற்று மாசுபாடு நுரையீரல் பிரச்சனை போன்ற பல்வேறு பாதிப்புகள் நம் உடலில் ஏற்படுகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

முன்மாதிரி திட்டம்எனவே சுற்றுப்புற சூழலை சுகாதாரமாக வைத்துக் கொள்வதால் இது போன்ற நோய்களிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம், மாவட்டத்திலேயே முதலில் இந்த கிராமத்தில் இந்த திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் அவர்கள் முயற்சி எடுத்து செயல்படுத்தி உள்ளார்.

இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து  தங்கள் வீடுகளில் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை  இரண்டு வகைகளாக அதாவது மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து உங்களுக்கு வழங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் போட்டு குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதனால் நம் சுற்றுப்புற சூழலும் சுகாதாரமும் காக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட திட்ட இயக்குனர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

—   மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.