புதுச்சேரி இணையவழி காவல்துறையின் எச்சரிக்கை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அதிக பணம் பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு (Current account) தேவைப்படுவதால் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கிற்கு கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

அதனால் சிலர் போலியான GST number, ROC (Registrar Of Companies), Udhyam Certificate மூலம் தங்கள் பெயரில் வங்கிக் கணக்கு (Current Account) தொடங்கி கொடுக்கின்றனர். மேலும் அத்தகைய வங்கி கணக்குகளை Open செய்ய சில கடைகளை வாடகைக்கு எடுத்து கம்பெனி தொடங்குகின்றனர். ஆனால் அந்த கம்பெனிகள் பெயரளவில் மட்டுமே அங்கு இருக்கும். அந்த கடைகளை காட்டி ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வங்கி கணக்கு (Current Account) தொடங்கி அந்த வங்கி கணக்கை Cyber குற்றவாளிகளிடம் கொடுத்து பணம் பெற்று கொண்டு Cyber குற்றங்கள் செய்ய துணை போகின்றனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

காவல்துறையின் எச்சரிக்கைஇதனால் பொதுமக்களுக்கு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு புதுச்சேரி இணைய வழி காவல் துறை எச்சரிக்கை செய்வது என்னவென்றால் உங்கள் கடைகள் மற்றும் இடத்தை யாரேனும் வாடகைக்கு கேட்டால் அவர்கள் எதற்காக கேட்கின்றார்கள் மற்றும் அங்கு என்ன நடக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் .

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மேலும் வங்கி  ஊழியர்கள் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முன் அவர்கள் அளிக்கும் ஆவணங்களான GST நம்பர், Udhayam சான்றிதழ் மற்றும் ROC ஆகியவை உண்மையான சான்றிதழ்களா என்று உறுதிப்படுத்திக் கொண்டு வங்கிக் கணக்கை தொடங்குமாறு வங்கி  ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலும் அத்தகைய GST நம்பர், Udhayam சான்றிதழ் மற்றும் ROC சான்றிதழ் அளிக்கும் அரசு ஊழியர்கள் அந்த சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் நபரையும் அந்த இடத்தையும் முறையாக சரிபார்த்த பின் சான்றிதழ் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் இணையவழி மோசடிக்காரர்களுக்கு வங்கிக் கணக்கு கொடுத்து அல்லது வேறு ஏதேனும் வழியில் அவர்களுக்கு துணை போவதாக தெரிந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி இணைய வழி காவல் நிலையம் சார்பாக எச்சரிக்கை செய்யப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.