துறையூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்த காயங்களுடன் சாவு !

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

விவசாயி அடித்துக் கொலையா ! முன்விரோதம் காரணமா போலீசார் தீவிர விசாரணை!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயசு 54 இவருக்கு திருமணம் ஆகி கல்லூரி படிக்கும் வயதில் மகன் உள்ளார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிலையில் இன்று காலை நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார்  இறந்து கிடந்துள்ளார்.

விவசாயி கொலைஇது பற்றி அவ்வழியே சென்ற கிராம மக்கள்   கொடுத்த தகவலின் படி துறையூர் காவல்துறை ஆய்வாளர் முத்தையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் விவசாயி முன் விரோதம் காரணமாக அடித்துக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.