திருச்சி கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்
திருச்சி கிழக்கு மாவட்டம், 18 வது வார்டு, பூக்கொல்லை கிளை, மனிதநேய மக்கள் கட்சி சார்பாக, மதுரையில் ஜூலை 6 (2025) ஞாயிற்றுக் கிழமை வக்பு ஒழிப்பு சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்ற வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய் என்கிற இரட்டைக் கோரிக்கை வலியுறுத்தி எழுச்சி பேரணி நடைபெறவுள்ளது.

எழுச்சி பேரணி, மஸ்தான் பட்டி டோல்கேட்டில் அருகில், மதுரையில் நடைபெறும் மாநாடு, திருச்சி கிழக்கு மாவட்ட மமக நிர்வாகிகளால் பூக்கொல்லை கிளை பொது மக்களுக்கு அழைப்பு விடுக்குமாறு போஸ்டர், விளம்பர பேனர் அறிமுக விழாவும், போஸ்டா் விநியோகமும் செய்யப்பட்டது.