பெண்களுக்கு மிரட்டல் விடுத்த வாட்ஸ் அப் ஆசாமி கைது !
புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கின்ற பெண்ணின் மகளுடைய தனிப்பட்ட புகைப்படங்களை யாரோ ஒரு நபர் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கின்ற பல நபர்களுக்கு வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பி இருக்கின்றார். மேற்படி நபரை கண்டுபிடித்து சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுத்த புகார் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாஸ்கரன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் B.C.கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
மேற்படி விசாரணையில் சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் அனுப்பிய நபரை பற்றிய விவரங்கள் பல்வேறு இணைய வழி மென்பொருள்களை வைத்து அனுப்பிய நபரின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி புகைப்படங்களை அனுப்பிய நபர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார் என்றும் மேற்படி நபர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்பதும் தற்போது அவர் ஒரிசாவில் பதுங்கி இருப்பதும் இணைய வழி போலீசாருக்கு தெரிய வரவே மேற்படி நபரை பற்றிய அனைத்து விவரங்களையும் இணைய வழி மூலமாகவே கண்டுபிடித்து ஒரிசா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரிய வரவே காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையிலான சைபர் கமாண்டோ வினோத்குமார், ராஜ்குமார் ஆகிய தனிப்படை ஒரிசாவில் உள்ள பாலாசூர் மாவட்ட பஸ் ஸ்டாண்ட் அருகே வைத்து கைது செய்யப்பட்டார்.
மேற்படி குற்றவாளி பிரகாஷ் நாயக் வயது 39 என்பவரை விசாரிக்கும் பொழுது அவருக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகி இருப்பதும் எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தன்னை தேடி வருகிறார்கள் என்று தெரிய வந்ததும் ஒரிசா மாவட்டத்தில் வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலையில் சேர்ந்து அவருடைய பழைய செல்போன்கள் அனைத்தையும் உபயோகப்படுத்தாமல் புதிய செல்போன் என்னை வாங்கி உபயோகித்து வருவதால் தன்னை யாரும் கண்டு பிடிக்க முடியாது என இங்கே பதுங்கி இருந்ததும் அவருடைய செல்போனை ஆய்வு செய்த போது பல பெண்களுடைய அந்தரங்க புகைப்படங்களும், வீடியோவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பெண்களுடன் அவர் பேசும் பொழுது தனக்கு இன்னும் திருமணமாகவில்லை மிகப்பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறேன் என்று வித விதமாக போட்டோஷாப்பில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய டிபியாக வைத்து பெண்களிடம் மயக்கி இவருடைய வலையில் விழவைத்து இருக்கின்றார்.
மேலும் அவர் பல பெண்களிடம் பழகி ஆசை வார்த்தை கூறி பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் பொழுது அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்தும் அல்லது அவர்கள் இவனுக்கு அனுப்பிய வீடியோ மற்றும் போட்டோக்களை வைத்து நிறைய பெண்களை மிரட்டியதும் விசாரணையில் தெரிய வருகின்றது. இவர் மீது வேறு எங்காவது இது போன்ற பெண்கள் சம்பந்தமான அல்லது வீடியோ மிரட்டல் போன்ற புகார் ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்திலும் பீகார், ஒரிசா அவர் பணி செய்த இடத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றோம்.
மேலும் பிரகாஷ் நாயக் சோசியல் மீடியாவான instagramல் 35 க்கும் மேற்பட்ட பெண்களுடன் பேசி அவர்களுடைய புகைப்படங்களை வாங்கி இருப்பதும் தனிப்பட்ட புகைப்படங்களை மற்றும் வீடியோக்களையும் பெண்களே இவனுக்கு அனுப்பி இருப்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பேஜை ஆய்வு செய்தபோது தெரியவந்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை சிறுமி தனிமையில் இருந்தபோது இவனே எடுத்து சேமித்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக அனைத்து வழக்குகளிலும் பிடிபடுகின்ற குற்றவாளிகளை ஆண் போலீஸ் அதிகாரிகளை வைத்து மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புவது நீதிபதி முன்பு ஆயர்படுத்து அனுப்புவது போன்றவற்றை செய்வது வழக்கம் ஆனால் இந்த வழக்கில் இணைய வழி காவல் நிலையத்தில் பணி புரிகின்ற பெண்களே மேற்படி மருத்துவ சிகிச்சை மற்றும் கோர்ட்டுக்கு அதிகப்படுத்துவது மத்திய சிறை சாலைக்கு கொண்டு சென்றது இந்த அனைத்து பணிகளையும் இந்த வழக்கில் கையாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி பிரகாஷ் நாயக்கை தலைமை குற்றவியல் நீதிபதி சிவகுமார் முன்பு ஆயர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இது பற்றி இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு பிரவீன் திருபாதி சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்களை அல்லது வீடியோக்களை யாருக்குமே அனுப்ப வேண்டாம். அது பின்பு அனுப்பியவருக்கு அது பிரச்சினையாக அமைந்துவிடும். இந்த வழக்கிலும் அப்படித்தான் என்றார் மேலும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் சமூக வலைதளங்களை உபயோகப்படுத்தும் போது தங்களுடைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் பொழுதும் அல்லது மற்றவர்களுக்கு அனுப்பும் பொழுதும் மிகுந்த எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.
சமூக வலைதளங்கள் மூலமாக புகைப்படங்களை வைத்து வீடியோக்களை வைத்து பெண்களுக்கு மிரட்டல் வந்தால் உடனடியாக இணைய வழி இலவச தொலைபேசி எண் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் எவ்வளவு விரைவாக புகார் கொடுக்கின்றீர்களோ அவ்வளவு விரைவாக புகைப்படம் மற்றவர்களுக்கு செல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், புகார் கொடுத்தவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்தார்.