முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையுடன் விளம்பரத்துறையில் தனி முத்திரை பதித்திருக்கும் “BE WELL ADS” நிறுவனம், திருச்சியின் இதயப்பகுதியான தில்லைநகரில் பிரம்மாண்டமான அலுவலகத்தை திறந்திருக்கிறது.
ஜூன்-25 அன்று நடைபெற்ற அலுவலக திறப்பு விழாவில், மேக்ஸ்விசன் கண் மருத்துவமனையின் மெடிக்கல் இயக்குநர் மரு. ஷிபு வர்க்கி; இஷா ஹோம்ஸ் நிறுவனத்தின் திருச்சி மண்டல இயக்குநர் எஸ்.ராமதாஸ்; ஆர்.பி.எஸ். குரூப்ஸ் ரோட்டோரியன் ஆர்.சுப்பிரமணி, ரூபி அபெக்ஸ் குருப்ஸ் லயன் வி.ஏ.துரைசிங்கம்; கேடமரன் இன்வெஸ்ட்மெண்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் ரோட்டோரியன் எம்.பெரியார் செல்வம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழாவை சிறப்பித்தினர்.
“ஒரே குடையின் கீழ் விளம்பரம் தொடர்பான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவானதுதான் BE WELL ADS. செய்தித்தாள், எஃப்.எம்., தியேட்டர், தொலைக்காட்சி, பேருந்துகள், ரோட் ஷோ, ஹோர்டிங்ஸ், பேருந்து நிழற்குடைகள், ஆட்டோ, பொது ஆடியோ விளம்பரம் உள்ளிட்டு அனைத்து வகை விளம்பரங்களையும் ஒரே இடத்தில் வழங்கலாம்.
இதுதவிர, லோகோ டிசைன் தொடங்கி, ப்ரவுச்சர் அச்சிடுவது வரையில் வியாபார விளம்பரம் தொடர்பான அனைத்து பணிகளையும் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் எங்களிடம் வழங்கிவிட்டு மனநிம்மதியோடு அவர்கள் வியாபாரத்தை தொடரலாம்.” என்கிறார், விளம்பரத்துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் BE WELL ADS நிறுவனத்தை நடத்திவரும் பார்த்தசாரதி.
— கலிங்கா இளவழகன்.