வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை!

0

கடந்த 14 .10. 2024 அன்று திருமதி சத்தியவாணி கீ மேனாக பெருகமணியில் அலுவலில் இருந்த சமயம் எதிரியான சூர்யா வயது 24 S/o சின்னராசு, 3/113, ஆதிதிராவிடர் தெரு, புலிவலம், கொடியாலம், திருச்சி மாவட்டம் என்பவர் தென்னக ரயில்வே உட்கோட்டத்தில் ரயில்வே கீ மேனாக  பணியில் இருந்த சத்தியவாணியை மிரட்டி அவரை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த  1 1/4 பவுன் தோடு மற்றும் தாலியை பறித்துக் கொள்ளையடித்து  கொண்டு வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி தப்பி ஓடியவரை அன்றைய தினமே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு  2. 7. 2025-ஆம் தேதி கணம் JM IV திருச்சி அவர்களால் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா மூன்று ஆண்டுகள் மொத்தம் எதிரிக்கு ஆறரை ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சூர்யா
சூர்யா

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்  ராமச்சந்திரன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில்  02.07. 2025 கனம் குற்றவியல் நீதிமன்ற எண் 4  திருச்சி நடுவர் விஜயா BA, BL அவர்கள் மேற்படி வழக்கின் எதிரி சூர்யா வயது 24 S/o சின்னராசு 3 / 113 ஆதிதிராவிடர் தெரு புலிவலம் திருச்சி என்பவருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.