கொலை மற்றும் வழிப்பறி குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம் !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, V. துறையுர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இறந்துபோன சேகர் 52/15, த.பெ சின்னதம்பி (வழக்கறிஞர், மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்) என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆச்சி குமார் என்பவரின் மருமகன் அம்பிகாபதியை கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக 185/14, U/s 147, 148, 341, 294 (b), 324, 302 IPC tau /w 3 of TNPPD Act 1994 ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கு 25.05.15 அன்று CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளது. மேற்படி கொலைக்கு பழிவாங்கும் விதமாக எதிரி 1. குமார் (எ) ஆச்சிகுமார் 48/15 த.பெ ஆச்சிமுத்து, மாரியம்மன் கோவில் தெரு. வி. துறையூர் என்பவர் 4 நபர்களுடன் சேர்ந்து மேற்படி சேகர் என்பவரை கடந்த 16.12.2015 அன்று கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இறந்துபோன சேகர் என்பவரின் மனைவி லதா 52/15 க.பெ சேகர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்படி எதிரிகள் மீது . 665/15, U/s 147, 148, 120(B), 341, 302 IPC- LIQ வழக்கு பதிவு செய்து, வழக்கில் 13 நபர்கள் எதிரிகளாக சேர்க்கப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்த நிலையில், எதிரி 10 பால் எமர்சன் பிரசன்னா (Splitup case) என்பவரை தவிர, மற்ற எதிரிகளுக்கு ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (08.07.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் (ADJ-II) எதிரி 10 பால் எமர்சன் பிரசன்னா 29/25 த.பெ உபகாரசாமி, மேலபுனவாசல், திருவையாறு என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 10,000/-ம் அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MIET பேருந்து நிறுத்தம் அருகே பாதிக்கப்பட்ட ஆரோக்கியம்மாள் 80/23. க.பெ. சின்னப்பன், ஆஞ்சநேயா நகர். MIET, குண்டூர், திருச்சி என்பவர் கடந்த 28.01.2023 அன்று தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்றபோது எதிரி வெங்கடேஷ் 30/25, த.பெ. பாலமுருகன், பங்காரு அடிகளார் நகர், திருவெறும்பூர், இருசக்கர வாகனத்தில் வந்து மேற்படி ஆரோக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக நவல்பட்டு காவல் நிலைய குற்ற எண்.22/2023, u/s 392 IPC ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் (JM-III) நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாஸ்கர் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (08.07.2025) திருச்சி குற்றவியல் நடுவர் எண் III நீதிபதி முகமுது சுகைல். (JM-III) அவர்கள் எதிரி வெங்கடேஷ் 30/25 த.பெ பாலமுருகன் என்பவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய். 5,000-ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேற்படி இருவேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்கள் ஆகியோரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.