தனுஷின் 54—ஆவது ஆரம்பமாகிருச்சு! இளையராஜ கதை என்னாச்சு?
‘குபேரா’வுக்கு அடுத்து மதுரை அன்புச் செழியன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் தான் ஆரம்பாகும் என எதிர்பார்த்திருந்தது கோலிவுட். நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ராஜ்குமார் பெரியசாமிக்கும் தனுஷுக்கும் பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்துவிட்டார் அன்பு. ஆனால் ராஜ்குமார் பெரியசாமி ஸ்கிரிப்ட் வேலைகளை முழுமையாக முடிக்க மூன்று-நான்கு மாதங்கள் ஆகும் என்பதால், ‘போர்த் தொழில்’ விக்னேஷ் ராஜா டைரக்ஷனில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிக்கும் 54—ஆவது படத்திற்கு ஓகே சொல்லி பூஜையும் போட்டுவிட்டார் தனுஷ்.
எல்லாம் சரி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னை லீலா பேலஸ் செவன் ஸ்டார் ஓட்டலில் தடபுடலாக ஆரம்பிக்கப்பட்டது ‘இளையராஜா’. இசைஞானியின் வாழ்க்கைக் கதையை அருண் மாதேஸ்வரன் டைரக்ஷனில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கும் இப்படத்தின் துவக்க விழாவிற்கு இசைஞானியும் கலைஞானியும் வந்திருந்து வாழ்த்தினார்கள். மூன்று பெரிய கம்பெனிகள் இணைந்து ‘இளையராஜா’ படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் விளம்பரம் வெளியானது.
அதன் பிறகு சில மாதங்களிலேயே மூன்றில் ஒரு கம்பெனி தயாரிப்பிலிருந்து விலகியதாக சொல்லப்பட்டது. அதனால் படம் அடுத்த கட்டத்திற்கு நகரவேயில்லை. டைரக்டர் அருண் மாதேஸ்வரனும் ஹீரோ தனுஷும் இசைஞானியைப் பார்க்கவேயில்லை.
அப்படின்னா ‘இளையராஜா’ படம் என்னாச்சு? கைகூடுமா? கைவிட்டாச்சா?