விஜய் சேதுபதிக்கு அப்படி…! அனல் அரசுக்கு நெருக்கடி!
கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஷ்கின் டைரக்ஷனில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெய்ன்’ படத்தின் ஷூட்டிங் முக்கால்வாசிக்கும் மேல் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன. எப்போதுமே தான் தயாரிக்கும் படங்கள் பாதிக்கும் மேல் முடிந்துவிட்டாலே பிஸ்னஸ் பேச ஆரம்பித்துவிடுவார் புலி.

ஆனால் இந்த ‘டிரெய்ன்’ முக்கால்வாசி முடிந்தும் பிஸ்னஸ் ஆகாததால் அப்செட்டில் இருக்கிறார் புலி. கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு ‘வாடிவாசல்’ படத்திற்காக வெற்றிமாறனுக்கும் சூர்யாவுக்கும் பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்திருந்தார் புலி. அது என்னாச்சுன்னு தெரியலையே என புலியையே புலம்பவிட்டார் வெற்றிமாறன். இப்ப சேதுவின் ‘டிரெய்ன்’-க்கு இப்படி ஒரு நிலைமை.
விஜய் சேதுபதியின் படத்திற்கு அப்படி ஒரு நிலைமைன்னா, அவரின் மகன் சூர்யா சேதுபதியை ’ஃபீனிக்ஸ்’ மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தி, தயாரித்த ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு, 15 கோடி கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறாராம்.
— மதுரை மாறன்