‘மாரீசன்’ டிரெய்லர் ரிலீசானது!
‘சூப்பர்குட் பிலிம்ஸின் 98-ஆவது படமாக உருவாகி, வருகிற 25-ஆம் தேதி உலகெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகிறது ’மாரீசன்’. மாமன்னனுக்குப் பிறகு வைகைப்புயல் வடிவேலு — ஃபகத் பாசில் இணையும் இப்படத்தை சுதீஷ் சங்கர் டைரக்ட் பண்ணுகிறார். கதை-திரைக்கதை : வி.கிருஷ்ணமூர்த்தி, ஒளிப்பதிவு : கலைச்செல்வன் சிவாஜி, இசை : யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங் : ஸ்ரீஜித் சாரங், ஆர்ட் டைரக்டர்: மகேந்திரன், பி.ஆர்.ஓ : யுவராஜ்.
வடிவேலு—ஃபகத் தவிர கோவை சரளா, விவேக் பிரசன்னா, பி.எல்.தேனப்பன், ரேணுகா, லிவிங்ஸ்டன், ஷரவண சுப்பையா, ஹரிதா ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘மாரீசன்’ டீசர் ரிலீசாகி, பெரும் வரவேற்றைப் பெற்றது. இப்போது டிரெய்லர் ரிலீசாகிவிட்டதால், சினிமா வியாபார வட்டார்த்தில் அதிக எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளான் இந்த ‘மாரீசன்’.
— மதுரை மாறன்