திருச்சி காவல் ஆணையர் தலைமையில் திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை கூட்டம்.
திருச்சி காவல் ஆணையர் தலைமையில் திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை கூட்டம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று 12/10/2020 இரவு திருநங்கைகள் சிலர் செய்த அட்ராசிட்டி ஆல்
மாநகர காவல் ஆணையர் நேரடியாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்..
இது தொடர்பாக அங்குசம் இணையதளம் மூலம் செய்தி வெளியிட்டோம்..
இதன் மூலம் திருநங்கைகள் இன்று 13/10/2020 காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தனது வாழ்வாதாரத்திற்கு ஒரு வழி வகுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
இதன் மூலம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்
இன்று 13/10/2020
திருநங்கைகள் வாழ்வாதார ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர்
அலுவலகத்தில் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
பேசிய காவல் ஆணையர் திருநங்கைகள் என்று கூறிக்கொண்டு பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வீதம் அத்துமீறி நடந்து கொள்ளும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.. மேலும் இவ் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தம்முனிஷா மற்றும் திருநங்கைகள் சங்க தலைவர்கள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் பங்கு பெற்றனர். மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் காவல் ஆணையரின் செயல்பாடுகள் அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
-ஜித்தன்